search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா
    X
    அமித் ஷா

    தமிழக மக்களின் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறோம் -அமித் ஷா

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடும் என உள்துறை மந்திரி அமித் ஷா கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுக கூட்டணி 150க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி, ஆட்சியமைக்கும் சூழல் உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அதிமுக-பாஜக கூட்டணிக்கு சுமார் 75 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    இந்நிலையில், தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து உள்துறை மந்திரி அமித் ஷா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    5 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு முழுமனதோடு சேவை ஆற்றியுள்ளது. மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதோடு பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடும் என தமிழக சகோதர சகோதரிகளுக்கு உறுதி அளிக்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதேபோல் கேரளாவில் பாஜகவுக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அமித் ஷா, பிரதமர் மோடி தலைமையில் மாநில முன்னேற்றத்திற்கு பாடுபடுவோம் என்று கூறி உள்ளார். மேலும், தேர்தலில் கடுமையான முயற்சிகள் மேற்கொண்ட பாஜகவினர் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
    Next Story
    ×