search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி ஜெயராமன்
    X
    பொள்ளாச்சி ஜெயராமன்

    பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயராமன் வெற்றி

    பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தற்போதைய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றிபெற்று உள்ளார்.

    கோவை:

    பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தற்போதைய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தி.மு.க சார்பில் டாக்டர் வரதராஜன்,

    மக்கள் நீதிமய்யம் சார்பில் சதீஷ்குமார், அ.ம.மு.க சார்பில் சுகுமார், நாம்தமிழர் சார்பில் லோகேஸ்வரி உள்பட 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இந்த தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 49 வாக்காளர்களில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 465 பேர் வாக்களித்துள்ளனர். 

    இந்த நிலையில் வாக்கு எண்ணிகை முடிவில் திமுக வேட்பாளர் வரதராஜனை விட அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் 1782 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

    Next Story
    ×