search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    நெல்லை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி 4 தொகுதிகளில் முன்னிலை

    நெல்லை மாவட்டத்தில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் அ.தி.மு.க. கூட்டணி 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, பாளை, நாங்குநேரி, அம்பை, ராதாபுரம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இன்று எண்ணப்பட்டது.

    நெல்லை தொகுதியில் மொத்தம் 1,95,366, பாளை தொகுதியில் 1,57,915, அம்பையில் 1,76,273, நாங்குநேரியில் 1,90,417, ராதாபுரத்தில் 1,83,799 ஓட்டுகள் பதிவாகி இருந்தது.

    காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

    நெல்லை தொகுதியில் 30 சுற்றுகளாகவும், அம்பையில் 26, பாளையில் 28, நாங்குநேரியில் 29, ராதாபுரத்தில் 27 சுற்றுகளாகவும் ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது.

    முதல் சுற்று முடிவில் அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளில் அ.தி.மு.க.வும், நெல்லையில் பா.ஜனதாவும் முன்னிலையில் இருந்தது.

    பாளை தொகுதியில் மட்டும் தி.மு.க. முன்னிலை பெற்றது. 

    Next Story
    ×