search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஷ்பு பின்னடைவு
    X
    குஷ்பு பின்னடைவு

    9-வது சுற்று முடிவு: சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்பு பின்னடைவு

    சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியில் 9-வது சுற்று முடிவில் டாக்டர் எழிலன் பாஜக வேட்பாளர் குஷ்புவை விட 16818 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
    சென்னை

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு, திமுக சார்பில் டாக்டர் எழிலன்,  அமமுக சார்பில் வைத்தியநாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஷெரீன் ஆகியோர் போட்டியிட்டனர். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் கே.எம்.ஷரீப், மக்கள் நீதி மய்யம் சின்னத்தில் போட்டியிட்டார்.

    9-வது சுற்று முடிவில் டாக்டர் எழிலன் 16818 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். குஷ்பு  11674 வாக்குகளும், திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் 28492 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
    Next Story
    ×