search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் வசந்த் -பொன். ராதாகிருஷ்ணன்
    X
    விஜய் வசந்த் -பொன். ராதாகிருஷ்ணன்

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்- விஜய் வசந்த் முன்னிலை

    வசந்தகுமார் மறைவால் காலியான கன்னியாகுமரி பாராளுமன்ற இடைதேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலையில் உள்ளார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் கொரோனா தொற்று பாதித்து மரணம் அடைந்தார்.

    வசந்தகுமார் மறைவால் காலியான கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு தமிழக சட்டசபை தேர்தலுடன் சேர்த்து இடை தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கினார்.

    பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஏற்கனவே இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.

    இத்தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட்டது.

    முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் கூடுதல் வாக்குகள் பெற்றார்.

    அடுத்து மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 10.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை காட்டிலும் 5 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருந்தார்.

    கிள்ளியூர் தொகுதியில் மட்டும் முதல் சுற்று ஓட்டுகள் எண்ணப்பட்டதில் விஜய் வசந்துக்கு 4533 வாக்குகள் கிடைத்திருந்தது. பொன். ராதாகிருஷ்ணன் 1164 வாக்குகள் பெற்றிருந்தார்.

    நாம் தமிழர் கட்சியின் அனிட்டர் ஆல்வின் 652 வாக்குகளும், மக்கள் நீதி மய்யத்தின் சுபா சார்லஸ் 104 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வருமாறு:-

    விஜய் வசந்த் (காங்.) 24,218

    பொன். ராதாகிருஷ்ணன்

    (பா.ஜனதா) 13,482

    (நாம் தமிழர் கட்சி) 2,434

    (மக்கள் நீதி மய்யம்) 363

    Next Story
    ×