search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக வாய்ப்புள்ள இடங்கள்
    X
    திமுக வாய்ப்புள்ள இடங்கள்

    தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றுவது யார்? - தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

    தமிழகத்தில் அதிமுக கூட்டணி 68 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய தந்தி டி.வி. கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
    சென்னை:

    மேற்கு வங்காளத்தில் நேற்று கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்  கணிப்பை தந்தி டி.வி. வெளியிட்டுள்ளது.

    சென்னையில் உள்ள 16 தொகுதிகள் 11 இடங்களை திமுக கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ராயுபுரம், வேளச்சேரி மற்றும் ஆர்கேநகர் தொகுதிகளில் மட்டும் அதிமுக வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளது. 3 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என தெரிவித்துள்ளது.

    அதிமுக வாய்ப்புள்ள இடங்கள்

    இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் திமுக தொகுதி 133 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும், அதிமுக 68 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 33 இடங்களில் கடும் போட்டி நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×