search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணசாமி
    X
    கிருஷ்ணசாமி

    வாக்கு எண்ணிக்கையை 3 மாதத்துக்கு தள்ளி வைக்கலாம்- கிருஷ்ணசாமி பேட்டி

    மே 2-ந் தேதி ஓட்டு எண்ணும் அறையில் நிறைய பேர் நிற்பதால் கொரொனா பரவல் ஏற்படலாம் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூரில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி அழைக்கப்படாமல் இருந்தற்கு எதிர்ப்பை தெரிவித்து கொள்கின்றேன். கொரொனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    முழு அடைப்பிற்கு இந்த அரசுகள் தள்ளிக்கொண்டு இருக்கின்றது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுபாடு ஏற்படுகின்றன. கவர்னர் தலையிட்டு மாநில அளவில், மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்களை உருவாக்கினால் மட்டுமே தடுக்க முடியும். கவர்னர் உடனடியாக கண்காணிப்பு குழுக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தை விட்டு விட்டு, கொரோனா கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

    பிரதமர் மோடி

    மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வில்லை எனில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி, உயிர்பலி ஏற்படும். பொதுமக்களுக்கு அபராதம் விதிக்காமல் அவர்களுக்கு முகக்கவசம் வழங்க வேண்டும்.

    இதுவரை இரு நிறுவனங்களுக்கு மட்டும் மருந்து தயாரிக்க ஏன் உற்பத்தி அனுமதி கொடுத்து இருக்கின்றனர் என தெரியவில்லை. தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு மருந்து தயாரிக்க அனுமதிக்க வேண்டும்.

    இரு மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். 150 ரூபாய்க்கு அதிகமாக மருந்தினை விற்பனை செய்ய கூடாது.

    மே 2-ந் தேதி ஓட்டு எண்ணும் அறையில் நிறைய பேர் நிற்பதால் கொரொனா பரவல் ஏற்படலாம். வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடத்த வில்லை என்றால் ஒன்றும் குடி மூழ்கி விடாது. 3 மாதங்கள் கழித்து வாக்கு எண்ணிக்கையை வைத்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×