search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி ஈடுபட்டுள்ள அதிகாரிகள்
    X
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி ஈடுபட்டுள்ள அதிகாரிகள்

    வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைப்பு

    தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போட்டனர்.

    கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள், வாக்குச்சாவடிக்கு வரும்போது உடல் வெப்பத்தில் மாறுபாடு ஏற்பட்டு தொற்றுக்கான சந்தேகம் உள்ளவர்கள் ஆகியோருக்கு கடைசி ஒரு மணி நேரத்தில் முழு கவச உடையுடன் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

    இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.  சரியாக 7 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு சென்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது.

    சில இடங்களில் வாக்கு எந்திரம் பழுது, மின்னணு எந்திரம் உடைப்பு, வாக்கு நிறுத்தி வைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால், வாக்குப்பதிவு முழுவதும் நிறுத்துவதற்கான எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

    தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தநிலையில் வாக்கு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. அதன்பின்னர் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வண்டியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்றப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. வாக்கு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

    தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் 2ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
    Next Story
    ×