search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    திருச்சி கிழக்கு தொகுதியில் குறிப்பிட்ட பட்டனை அழுத்தினால் வேறு சின்னத்தில் பதிவான வாக்கு- வாக்காளர்கள் கடும் அதிர்ச்சி

    திருச்சி கிழக்கு தொகுதியில் எந்திரத்தில் ஒரு வாக்காளருக்கு ஓட்டு போட்டால் அந்த வாக்கு வேறொரு வேட்பாளருக்கு பதிவானது. இதனை தணிக்கை எந்திரமான விவிபேட் மூலம் அறிந்த வாக்காளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    திருச்சி:

    திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை தெப்பக்குளம் அருகே வாணப்பட்டறை பகுதியில் உள்ள தேசிய மேல் நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த மையத்தில் இன்று காலை முதலே ஏராளமான வாக்காளர்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் மின்னணு எந்திரத்தில் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

    அப்போது அங்குள்ள எந்திரத்தில் ஒரு வாக்காளருக்கு ஓட்டு போட்டால் அந்த வாக்கு வேறொரு வேட்பாளருக்கு பதிவானது. இதனை தணிக்கை எந்திரமான விவிபேட் மூலம் அறிந்த வாக்காளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்தனர். இதனால் அந்த மையத்தில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. எந்திரத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் அதனை உறுதி செய்தனர். இதையடுத்து அந்த மின்னணு எந்திரம் மாற்றப்பட்டு வேறு எந்திரம் கொண்டு வரப்பட்டது.

    அதில் கோளாறு சரி செய்யப்பட்டதை உறுதி செய்ததும் வாக்குப்பதிவுக்கு அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதனால் அந்த வாக்குச்சாவடியில் சுமார் 40 நிமிடம் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது. அத்துடன் முதலில் வாக்களித்த 7 பேரில் வாக்குகள் குறித்து தலைமை அதிகாரியிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×