search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு
    X
    வாக்குப்பதிவு

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11½ மணி நிலவரப்படி பதிவான வாக்கு விபரம்

    கள்ளக்குறிச்சியில் வாக்குசாவடி மையத்தில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை என 4 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 11 லட்சத்து 13 ஆயிரத்து 976 வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்காக 1,569 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    இந்த வாக்குசாவடி மையத்தில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். காலை 11½ மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் சதவீதத்தில் பின்வருமாறு:-

    கள்ளக்குறிச்சி-25.65, ரிஷிவந்தியம்-19.92, சங்கரா புரம்-24.24, உளுந்தூர்பேட்டை-23.74 என கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சராசரியாக 23.43 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
    Next Story
    ×