search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தபோது எடுத்த படம்.
    X
    வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தபோது எடுத்த படம்.

    மத்திய அரசின் திட்டங்களை பெற வானதி சீனிவாசனுக்கு வாக்களியுங்கள்- ஜி.கே.வாசன் பிரசாரம்

    தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது என்று தி.மு.க. தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வாக்கு சேகரிக்க விரும்புகிறது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    கோவை:

    கோவை தெற்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கோவை தெப்பக்குளம் பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.அப்போது ஜி.கே.வாசன் பேசியதாவது:-

    தமிழகத்தின் மாநில பொறுப்பில் இருந்த ஒரு தலைவரை அவருடைய செயலாற்றலால் அகில இந்திய மகளிர் அணி தலைவியாக வானதிசீனிவாசனை பிரதமர் நரேந்திரமோடி நியமித்திருக்கிறார் என்றால் அவரை விட தகுதி பெற்ற வேட்பாளர் யாரும் இருக்க முடியாது. உங்கள் வேட்பாளர் தொகுதி மக்களின் எண்ணங்களை அறிந்தவர். அவருடைய வெற்றி என்பது தமிழகத்தின் வளர்ச்சிக்கான வெற்றி என்று நினைக்கிறோம்.

    தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது என்று தி.மு.க. தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வாக்கு சேகரிக்க விரும்புகிறது. இந்தியாவிலேயே பெண்களுக்கான திட்டம் அதிக அளவில் தமிழகத்துக்கு தான் கிடைத்தது. அந்த திட்டம் தொடர பா.ஜனதா வேட்பாளர் வானதிசீனிவாசனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, கோவை மாநகர தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் வி.வி.வாசன், மாநில செயலாளர் குல்பி தங்கராஜ், இளைஞர் அணி தலைவர் கார்த்திக் கண்ணன், குனிசை ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×