search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை உயர் நீதிமன்றம்
    X
    சென்னை உயர் நீதிமன்றம்

    தபால் வாக்குகள் பாதுகாப்பு -தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

    தபால் வாக்குகளில் எந்த ஒரு குற்றச்சாட்டும் இடம்பெறாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.
    சென்னை:

    80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்களுக்கு தபால் ஓட்டு அளிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதன்படி தமிழக சட்டசபை தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. தேர்தல் ஆணைய குழுவினர் வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை பெறுகின்றனர்.

    இந்நிலையில், தபால் வாக்குகளை சிசிடிவி கேமரா பொருத்திய அறையில் பாதுகாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தபால் வாக்குகளில் எந்த ஒரு குற்றச்சாட்டும் இடம்பெறாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் தபால் ஓட்டுபோடுவதற்காக 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு 12டி படிவம் வழங்கப்பட்டது. அதில் 12 ஆயிரம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டன. இதில் 7300 பேரின் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. சென்னையில் 70 வாக்குப்பதிவு குழுக்கள் வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டுகளை பெறும் பணியை தொடங்கினார்கள்.
    Next Story
    ×