search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாம் தமிழர் கட்சி
    X
    நாம் தமிழர் கட்சி

    துறைமுகம்-ஒட்டப்பிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மாற்றம்

    நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை துறைமுகம் தொகுதியில் புதிய வேட்பாளராக அப்துல் பாசில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் வைகுண்டமாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி சார்பில் சென்னை துறைமுகம் தொகுதியில் முகமது கடாபி மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக சுப்புலட்சுமி ஆகியோர் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்த 2 தொகுதிகளிலும் மாற்று வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.

    துறைமுகம் தொகுதியில் புதிய வேட்பாளராக அப்துல் பாசில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் வைகுண்டமாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மாற்று வேட்பாளர்களான இவர்கள் இருவரும் தொகுதியில் பிரசாரத்தை உடனடியாக தொடங்கினார்கள்.

    Next Story
    ×