search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரத்குமார்
    X
    சரத்குமார்

    கமல்ஹாசன் தொகுதியில் சரத்குமார் நாளை பிரசாரம்

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 37 இடங்களில் போட்டியிடுகிறது.
    சென்னை:

    தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 37 இடங்களில் போட்டியிடுகிறது. இந்திய ஜனநாயக கட்சி 40 இடங்களில் நிற்கிறது.

    பிரசாரம் சூடுபிடித்து விட்டதால் வேட்பாளர்கள் ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள். கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தலைவர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்து தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். நாளை கோவை மண்டலத்தில் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    மக்கள் நீதி மய்யம் துணை தலைவரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான மகேந்திரனை ஆதரித்து காலை 11 மணிக்கு உடையாம்பாளையம் பகுதியில் பிரசாரம் செய்கிறார். 11.30 மணிக்கு உப்பிலிபாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.

    கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் அவரை ஆதரித்து நாளை மாலை சரத்குமார் பிரசாரம் செய்கிறார். காலை 5 மணிக்கு பெரியார் நகரிலும், 5.40 மணிக்கு கள்ளுக்குளி, 6.15 மணிக்கு கொட்டமேடு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    இரவு 7 மணிக்கு உக்கடம் சி.எம்.சி. காலனி, 7.30 மணிக்கு மணக்கவீதி ஆகிய இடங்களிலும் 8 மணிக்கு தெப்பக்குளம் பகுதியிலும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக சரத்குமார் பிரசாரம் செய்கிறார்.

    Next Story
    ×