search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி
    X
    கனிமொழி

    முதியோர் உதவி தொகையை நிறுத்திய அரசு அதிமுக - தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

    திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.கூட்டணி வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    திருச்செங்கோடு:

    சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதைத் தொடர்ந்து இன்று கனிமொழி எம்.பி. நாமக்கல் மேற்கு மாவட்ட தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்குகள் சேகரித்தார்.

    கொக்கராயன் பேட்டையில் பிரசாரத்தை தொடங்கிய அவர் காவேரி ரெயில் நிலையம், ஆவாரங்காடு ஆகிய இடங்களில் திறந்த வேனில் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். பிரசாரம் செய்யும் இடங்களில் கனிமொழி எம்.பிக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பிரசாரத்தின்போது, திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.கூட்டணி வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி பேசியதாவது:-

    உங்களுக்காக ஆயிரம் ரூபாய் மாதம் தொகை வழங்குவதாக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கின்றார்கள். இந்த ஆட்சியில் முதியோர் உதவி தொகை எல்லாம் நிறுத்திவிட்டார்கள். பாதி பேருக்கு மேல் முதியோர் உதவி தொகை வரவே இல்லை.

    நம்முடைய ஆட்சி வந்தவுடன் முதியோர் உதவி தொகை எல்லோருக்கும் கிடைக்கும். அந்த தொகை ரூ.1000-ல் இருந்து ரூ. 1500- ஆக உயர்த்தி வழங்கப்படும். நகராட்சியில் இருக்கக்கூடிய பெண்களுக்கு, சகோதரிகளுக்கு இனிமேல் நீங்கள் வெளியே போகும்போது வீட்டில் உள்ளவர்களிடம் காசு கொடுங்கள் என கேட்க வேண்டாம். பஸ்சில் ஏறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். எங்களுக்கு கட்டணம் இல்லை. அப்படி என சொல்லி நீங்கள் ஏறி போயிக்கிட்டே இருக்கலாம்.நகர புறங்களில் இருக்கக்கூடிய பேருந்துகளில் பெண்களுக்கு இனிமேல் கட்டணமே கிடையாது.

    கொரோனா காலக்கட்டத்திலே முழு அடைப்பு. யாருக்கும் வேலை இல்லை. சம்பளம் இல்லை. வருமானம் இல்லை. அ.தி.மு.க. அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்கிறீர்களே அது போதுமானது இல்லை. அதை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தாருங்கள் என பல முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எங்கள் கூட்டணியில் இருக்கிற தலைவர்கள் எல்லாம் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

    ஆனால் இந்த ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் யாருமே அதை காதில் கூட வாங்கிக்கொள்ளவில்லை. அப்போது பொங்கல் பாண்டிகை வருகிறது. அதில் பரிசு தருகிறேன் என்று சொன்னார்கள். அதுவும் யாருக்கும் சரியாக கொடுக்கவில்லை.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். விவசாய கடன் ரத்து செய்து, விவசாயிகள் நலன் காக்கப்படும். ஆகவே தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டுக்கொண்டார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து கனிமொழி எம்.பி. மாலையில் ஒட்டமெத்தை, ஆவத்திபாயைம், குமாரபாளையம், படவீடு ஆகிய இடங்களில் பேசுகிறார்.

    Next Story
    ×