search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல் ஹாசன்
    X
    கமல் ஹாசன்

    மக்களின் ஏழ்மையை இலவசங்கள் ஒழிக்காது - கோவையில் கமல் பிரசாரம்

    திமுக உருவானது காலத்தின் கட்டாயம், தற்போது அதை அகற்றுவதும் காலத்தின் கட்டாயமே என கமல் ஹாசன் பிரசாரத்தின்போது பேசினார்.
    கோவை:

    கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், திமுக உருவானது காலத்தின் கட்டாயம், தற்போது அதை அகற்றுவதும் காலத்தின் கட்டாயமே. மக்களின் ஏழ்மையை இலவசங்கள் ஒழிக்காது’ என்றார்.

    ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு கமல் அளித்த பேட்டி வருமாறு:-

    இரண்டு கட்சிகளும் (அதிமுக, திமுக) மக்கள் ஆதரவை பெற தகுதியான கட்சிகள் அல்ல. மக்கள் அரசியலை நோக்கி ஒரு தீர்க்கமான நகர்வை மேற்கொள்ள வேண்டும். அதாவது தொங்கு சட்டசபை அமைந்துவிடாமல் இருக்க, தயவுசெய்து அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும். 

    நான் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த விரும்புகிறேன். அரசியலமைப்பிற்கு சேவை செய்வதற்கான வாய்ப்புதான் எனது இலக்கு ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×