என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்.முருகனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Byமாலை மலர்18 March 2021 2:46 PM GMT (Updated: 18 March 2021 2:46 PM GMT)
பாஜக மாநில தலைவர் எல்.முருகன், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இதுவரை 3546 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 607 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்.
பாஜக மாநில தலைவர் எல்.முருகன், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
அசையா சொத்து, அசையும் சொத்து என மொத்தம் ரூ.2.64 கோடி மதிப்பில் தனக்கு சொத்து இருப்பதாக பிரமாண பத்திரத்தில் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கையிருப்பு ரொக்கமாக தன்னிடம் ரூ.45 ஆயிரம், தன் மனைவியிடம் ரூ.75 ஆயிரம் இருப்பதாகவும் கூறி உள்ளார்.
மேலும் தன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 21 வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும் எல்.முருகன் கூறி உள்ளார்.
Next Story
×