search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    முக ஸ்டாலின் 45 தொகுதிகளில் பிரசாரம்

    முக ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களுக்கு மொத்தம் 45 தொகுதிகளில் ஆதரவு திரட்டுகிறார்.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

    தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) முதற்கட்டமாக கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். தேர்தல் சுற்றுப் பயண விவரம் வருமாறு:-

    15-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணி: திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் தொகுதிகள். இடம்: தெற்கு ரத வீதி, திருவாரூர்.

    16-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணி: அறந்தாங்கி, ஆலங்குடி தொகுதிகள். இடம்: கீரமங்கலம், அறந்தாங்கி.

    மாலை 4 மணி: வீரபாண்டி, ஏற்காடு தொகுதிகள். இடம்: கஜல்நாயக்கன்பட்டி, வீரபாண்டி.

    மாலை 6 மணி: நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி-வேலூர், திருச்செங்கோடு தொகுதிகள். இடம்: பூங்கா சாலை, நாமக்கல்.

    17-ந்தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணி: நத்தம், வேடசந்தூர் தொகுதிகள். இடம்: வடமதுரை, நத்தம்.

    காலை 11 மணி: மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய தொகுதிகள். இடம்: பழங்காநத்தம், மதுரை.

    மாலை 5.30 மணி: தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், திருபெரும்புதூர் தொகுதி கள். இடம்: சண்முகம் சாலை, தாம்பரம்.

    18-ந்தேதி (வியாழக் கிழமை) காலை 10 மணி: கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர் தொகுதிகள். இடம்: கும்மிடிப்பூண்டி

    மாலை 5 மணி: திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை தொகுதிகள். இடம்: திருப்பத்தூர்.

    மாலை 6 மணி: புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட்டை தொகுதிகள். இடம்: கடை வீதி, புதுக்கோட்டை.

    19-ந்தேதி (வெள்ளிக் கிழமை) காலை 9 மணி: ஒரத்தநாடு, திருவிடை மருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகள். இடம்: ஒரத்தநாடு.

    மாலை 4 மணி: திருப்பூர் தெற்கு, அவினாசி, திருப்பூர் வடக்கு தொகுதிகள். இடம்: திருப்பூர் மாநகரம்.

    மாலை 6 மணி: கிணத்துக் கடவு, தொண்டாமுத்தூர், சூலூர் தொகுதிகள். இடம்: கிணத்துக்கடவு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களுக்கு மொத்தம் 45 தொகுதிகளில் ஆதரவு திரட்டுகிறார். இந்த 45 தொகுதிகளிலும் அவர் பேசு இடங்களில் சிறப்பான வரவேற்பு கொடுக்க தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×