search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகே வாசன்.
    X
    ஜிகே வாசன்.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

    அதிமுக கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற ஜிகே வாசனின் தமிழ்நாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து. 

    அதிமுக- தமிழ்நாநில காங்கிரஸ் கட்சி இடையே இன்று இரவு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ஈரோடு கிழக்கு, பட்டுக்கோட்டை, தூத்துக்குடி, உள்பட 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×