search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    அ.தி.மு.க.வுடன் மீண்டும் பேச்சு நடத்துவோம்- ஜி.கே.வாசன்

    தேவையான தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கை அ.தி.மு.க. மீது தனக்கு இருப்பதாக ஜி.கே.வாசன் கூறினார்.

    சென்னை:

    ஆழ்வார்பேட்டையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தொகுதி பங்கீடு சுமூகமாக நடக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் அ.தி.மு.க. என்னுடன் பேசி கொண்டிருக்கிறது.

    12 தொகுதிகள் த.மா.கா. கேட்ட நிலையில் அ.தி.மு.க. 6 தொகுதிகள் தர முன்வந்திருக்கிறது.

    சைக்கிள் சின்னத்தை பெறுவதற்கான போராட்டம் தொடர்கிறது. அது தேர்தல் கமி‌ஷன் கையில் இருக்கிறது. இது மற்ற கட்சிகளின் சின்னம் போல் அல்ல. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் கட்சி சின்னம். உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங்குக்கு சைக்கிள் சின்னம். ஒருவேளை யாராவது மனு செய்து எங்களது வேட்பாளர் வெற்றியை தடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் சிந்திக்கும் சூழ்நிலையில் இருக்கிறது. அந்த போராட்டம் தொடரும்.

    எங்களுக்கு தேவையான தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கை அ.தி.மு.க. மீது எனக்கு இருக்கிறது.

    வெற்றி அடிப்படையிலேயே அ.தி.மு.க.வுடன் பேசுகிறேன். அந்த யூகத்தின் அடிப்படையில் பேசவில்லை.

    கட்சி வெற்றி பெறுவதற்கு நான் சீட் வாங்க வேண்டும். சட்டசபையில் த.மா.கா.வின் குரல் ஒலிக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பாரபட்சம் கொண்டிருக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும். அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

    முதல்வர் எடப்பாடி, பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சிறப்பாக ஆட்சி செய்கிறார்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக ஆதரித்து கொண்டிருக்கிறோம்.

    அவர்கள் அவகாசம் எடுத்துகொண்டு எங்களுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள். சரியான பாதையில் த.மா.கா. சென்று கொண்டிருக்கிறது.

    கூட்டணி தர்மத்தை என்றும் கடைபிடிக்கும் கட்சியாகவே த.மா.கா. செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×