search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக கூட்டணி கட்சிகள்
    X
    திமுக கூட்டணி கட்சிகள்

    திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டி- இன்று அறிவிப்பு

    தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தொகுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.
    சென்னை:

    நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளனர்.

    இக்கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:-

    தி.மு.க.- 174

    காங்கிரஸ்- 25

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி- 6

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி- 6

    ம.தி.மு.க.- 6

    விடுதலை சிறுத்தைகள் கட்சி- 6

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 3

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 3

    மனிதநேய மக்கள் கட்சி- 2

    தமிழக வாழ்வுரிமை கட்சி- 1

    மக்கள் விடுதலை கட்சி- 1

    ஆதித் தமிழர் பேரவை- 1

     இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று மதியம் 12 மணிக்கு தி.மு.க அறிவிக்கிறது. 
    Next Story
    ×