search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரசார சுற்றுப்பயணம்

    பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் பகுதிகளில் இன்று மாலை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ‘விவசாயி' சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர் பிரசார பயணம் மேற்கொள்கிறார். அதன் விவரம் வருமாறு:-

    9-ந்தேதி (இன்று) மாலை 4 மணிக்கு பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், 10-ந்தேதி (நாளை) மாலை 4 மணிக்கு பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு,

    11-ந்தேதி காலை 10 மணி முதல் ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, ஆற்காடு, வேலூர், மாலை 4 மணி முதல் அணைக்கட்டு, கீழ்வைத்தியனான் குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்ப்பேட்டை, திருப்பத்தூர்.

    12-ந்தேதி காலை 10 மணி முதல் கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி, பாலக்கோடு, பென்னாகரம், மாலை 4 மணி முதல் தர்மபுரி, மேட்டூர், ஓமலூர். இரவு 8 மணிக்கு சேலம் பொதுக்கூட்டம்.

    13-ந்தேதி காலை 10 மணி முதல் ஏற்காடு, ஆத்தூர், கெங்கவள்ளி, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, மாலை 4 மணி முதல் உளுந்தூர்ப்பேட்டை, விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திண்டிவனம்.

    14-ந்தேதி மாலை 4 மணி முதல் சென்னை மற்றும் திருவொற்றியூர் தொகுதி.

    மேற்கண்ட தகவல் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×