search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டமன்ற தேர்தலையொட்டி திருவாரூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.
    X
    சட்டமன்ற தேர்தலையொட்டி திருவாரூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

    திருவாரூர் மாவட்டத்தில் 14 சிறப்பு சோதனை சாவடிகள் அமைப்பு- போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    திருவாரூர் மாவட்டத்தில் மது கடத்தல் மற்றும் தேர்தல் தொடர்பான பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்கும் வகையில் 14 சிறப்பு சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி கூறினார்.
    திருவாரூர்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளன. சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் மது கடத்தல் மற்றும் தேர்தல் தொடர்பான பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்கும் வகையில் 14 சிறப்பு சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சிறந்த முறையில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

    சட்டம்- ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்கள் தங்கள் கவனத்துக்கு வரும் தேர்தல் சம்பந்தப்பட்ட சட்டவிரோத தகவல்கள் மற்றும் விதிமீறல்கள் பற்றிய விவரங்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து தகவல் தெரிவிக்க திருவாரூர் மாவட்ட தனிப்பிரிவு-9498100865, போலீஸ் கட்டுப்பாட்டு அறை-9498181220 மற்றும் 100, ஹலோ போலீஸ்-8300087700, 9384039633 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி கூறினார்.
    Next Story
    ×