search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேமுதிக
    X
    தேமுதிக

    அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் இறுதியானது

    தே.மு.தி.க.வுக்கு அ.தி.மு.க. அணியில் 15 முதல் 18 இடங்கள் வரையில் ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.

    பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 20 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இன்னொரு முக்கிய கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதுதொடர்பாக அ.தி.மு.க., தே.மு.தி.க. இடையே 4 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ஆனால் இதுவரை இறுதிமுடிவு அறிவிக்கப்படாமலேயே உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. ஆனால் அ.தி.மு.க. தரப்பிலோ, அத்தனை இடங்களை தர முடியாது. 15 முதல் 20இடங்கள் வரை ஒதுக்குவதற்கு தயாராக இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் தே.மு.தி.க.வோ பா.ம.க.வுக்கு இணையான தொகுதிகளை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

    இதற்கிடையே நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தே.மு.திக.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுதொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, மேல்சபை எம்.பி. இடம் தருவதாக அ.தி.மு.க. தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    எத்தனை சட்டசபை இடங்கள் என்பது பற்றிதான் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

    தே.மு.தி.க.வுக்கு அ.தி.மு.க. அணியில் 15 முதல் 18 இடங்கள் வரையில் ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான உடன்பாட்டில் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. தலைவர்கள் இன்று அல்லது நாளை கையெழுத்திட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×