search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்- கே.எஸ்.அழகிரி

    தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    * மதச்சார்பின்மை வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயல்படுகிறோம்.

    * சமூகநீதிக்கு எதிராக இருக்கும் சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே இலக்கு.

    * தி.மு.க.வுடனான தொகுதி உடன்பாடு மகிழ்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    * கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    * அரசியலில் ஏற்ற, இறக்கங்கள் என்பது இயல்பு.

    * இந்தியாவில் மிகப்பெரிய நோயாக பாஜக வளர்ந்து வருகிறது.

    * தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி.

    * பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் கட்சி மட்டுமே.

    * வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்.

    இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்

    திமுகவுடான தொகுதி பங்கீடு உடன்பாடு முழு திருப்தி அளிக்கிறது. திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி இத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெறும் என காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
    Next Story
    ×