search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியல்
    X
    வாக்காளர் பட்டியல்

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 5 ஆண்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரம் அதிகரிப்பு

    மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையில் 2-வது பெரிய தொகுதியாக திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    திருப்பரங்குன்றம்:

    தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 16-ந் தேதி சட்டமன்றத்தேர்தல் நடைபெற்றது. அதில் 234 தொகுதிகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 79 ஆயிரத்து 299 இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த தொகுதிக்கு எதிர்பாராவிதமாக 2016-ம் ஆண்டில் நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனையொட்டி வாக்காளர்கள் சேர்க்கை நடைபெற்றது. அதில் சுமார்3 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்ந்தனர். முதல் இடைத்தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 82ஆயிரத்து 87 ஆக உயர்ந்தது.

    இந்த நிலையில் இதே தொகுதியில் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத ஒன்றாக 2-வது முறையாக 2019-ம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 3 லட்சத்து ஆயிரத்து 557 ஆக வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

    இந்த நிலையில் 2021-க்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கையும், தற்போது 2021-ல் வாக்காளர்களின் எண்ணிக்கையும் ஒப்பிட்டு பார்க்கும்போது கடந்த 5 ஆண்டுகளில் 39 ஆயிரத்து 603 வாக்காளர்கள் அதிகரித்து உள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்களாக சேருகிறார்கள். எனவே படிப்படியாக வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையில் 2-வது பெரியதொகுதியாக இந்த தொகுதியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களின் வாக்கு யாருக்கு? எந்த கட்சி சாதகமாக அமையும்? என்று அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதில் வருகிற மே மாதம் 2-ந்தேதி அன்று நடைபெறும் ஓட்டு எண்ணிக்கையின்போது தெரியவரும்.
    Next Story
    ×