search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேமுதிக
    X
    தேமுதிக

    பாமகவுக்கு இணையான தொகுதிகளை கேட்டு பிடிவாதம்: அதிமுக-தேமுதிக தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிப்பு

    அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. தங்களுக்கும் பா.ம.க.வுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. வுக்கு முதலில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டது. 23 தொகுதிகளை அந்த கட்சிக்கு அ.தி.மு.க. ஒதுக்கி கொடுத்தது.

    கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. தங்களுக்கும் பா.ம.க.வுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதனால் அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையிலான பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுவரை 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் நேற்று 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடை பெறுவதாக இருந்தது. ஆனால் தே.மு.தி.க. தரப்பில் பேச்சுவார்த்தைக்கு யாரும் செல்லவில்லை.

    அதேநேரத்தில் தே.மு.தி.க. துணை செயலாளரான எல்.கே. சுதிஷ் கூட்டணிக்காக அ.தி.மு.க. தான் கெஞ்சிக் கொண்டு இருக்கிறது என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

    இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா? இல்லை விலகி தனித்து போட்டியிடுமா? என்பது பலத்த கேள்வியாக உருவெடுத்துள்ளது.

    அ.தி.மு.க.வுடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்பது பற்றி தே.மு.தி.க. நிர்வாகிகள் யாரும் வாய் திறக்காமல் மவுனமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×