search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீதாராம் யெச்சூரி
    X
    சீதாராம் யெச்சூரி

    மக்கள் நலனுக்காக தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம்- சீதாராம் யெச்சூரி பேட்டி

    அ.தி.மு.க அரசு பா.ஜ.க சொல்வதை கேட்டுதான் செயல்படுகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

    கோவை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க அரசு பா.ஜ.க சொல்வதை கேட்டுதான் செயல்படுகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற, மக்களின் நலனுக்காக தான் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம். சசிகலா அரசியலில் இருந்து விலகியதை பா.ஜனதா கண்டிப்பாக வரவேற்கும். அதில் பா.ஜனதாவுக்கு பங்கு உள்ளதா என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். எங்கள் கட்சி தி.மு.க கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறோம். சி.பி.எம் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை பொறுத்து பிற மாநிலங்களில், பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

    கேரளா அரசு புதிய வேளாண் சட்டங்களை நிராகரித்துள்ளது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆளும் அரசு அதனை ஆதரிக்கிறது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    நாடாளுமன்றத்தில் எங்களது எம்.பிக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் அதற்காக நாங்கள் கவலைப்படுவதில்லை. எங்கள் நோக்கம் மக்களுக்காக போராடுவது. களத்தில் என்றுமே நாங்கள் இருப்போம். நாட்டிற்கும் மக்களுக்கும் எதிராக நடக்கும் நிகழ்வுகளை எதிர்த்து நாங்கள் என்றுமே குரல் கொடுப்போம்.

    முதியோர்களுக்கு தபால் வாக்கு வழங்கப்பட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால் தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடக்கக்கூடாது. தேர்தல் ஆணையம் அதனை பார்த்து விசாரித்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க.வின் குழுவோடு முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்துள்ளது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும். இந்த தேர்தலில் தமிழக மக்களை பாதுகாக்க, பண்பாட்டை பாதுகாக்க, அ.தி.மு.க. பா.ஜ.க கூட்டணியை தோற்கடிக்க தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம். மக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார்.

    Next Story
    ×