search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    அதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்க வாய்ப்பு இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

    அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்க வாய்ப்பே இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
    சென்னை:

    சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்த எழுச்சியை இப்போதும் காண முடிகிறது.

    * 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

    * அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு கிடையாது. கொள்கை வேறு, கூட்டணி வேறு. எங்கள் கூட்டணியில் பாஜக ஒரு அங்கம்.

    * அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்க வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×