என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  யார் மூலம் உதவிகள் கிடைக்கும்
  X
  யார் மூலம் உதவிகள் கிடைக்கும்

  உங்களுக்கு யார் மூலம் உதவிகள் கிடைக்கும்?- பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண் ஜாதகத்தில் கணவரை குறிக்கும் கிரகம் செவ்வாய். ஆண் ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கும் கிரகம் சுக்ரன். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரனும் 7-ம் அதிபதியும் பலமாக இருந்தால் மனைவி மூலமாக தாராளமான தன வரவுகள், உதவிகள் உண்டாகும். திருமணத்திற்கு பிறகு அனைத்து விதமான வசதிகளும் கிடைக்கப் பெறும்.


  வாழ்க்கை என்பது ஒரு நதியின் ஓட்டத்தை போன்று திட்டமிட முடியாத ஒன்று. அதே சமயம் ஒரு எதிர்பார்ப்பை நோக்கிய பயணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த பயணத்தில் அதிர்ஷ்டமும், உதவியும் உடன் பிறந்த பிறவிகள். எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்ற பொதுவான கருத்து இருந்தாலும் விதியை மதியால் வெல்ல முடியும் என்ற சூட்சுமமும் உலகை ஆண்டு கொண்டு தானே இருக்கிறது.

  ஒரு சிலரின் வாழ்க்கைப் படைப்பு, கடவுளின் நேரடி கண்காணிப்பில் இருப்பது போல் தோன்றும். ஏ.டி.எம். மிஷின் போல் பணம் கொட்டும். இவர்களது படைப்பில் வேறு ஏதோ ஒரு கூடுதல் விசே‌ஷம் இருப்பது போன்ற மாயை இருக்கும். இவை ஒருபுறம் இருந்தாலும். சிலருக்கு குடும்பங்களில் பணத்தின் சுவடே தெரியாது. இவர்களுக்கு எந்தக் கிரகமும், எந்த உறவுகளும் உதவி செய்யாதா என்ற கேள்வி எழும்.

  உலகில் வாழும் அனைத்து உயிர்களும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழுகின்றன. ஒவ்வொரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் ஒருவரைச் சார்ந்தே மற்றவர் வாழ வேண்டியது காலத்தின் கட்டாயம். அதாவது கொடுக்கல்-வாங்கல் என்ற உதவி இருந்தால் மட்டுமே அனைத்து உயிர்களும் ஜீவிக்க முடியும். ஒருவருக்கு கிடைக்கும் உதவியை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று கேட்டுப் பெறும் உதவி, மற்றொன்று கேட்காமல் தேடி வரும் உதவியாகும்.

  கேட்டுப்பெறும் உதவி ஒருவருடைய முயற்சியால் நடப்பது. கேட்காமல் தேடி வரும் உதவி ஒரு வருடைய பூர்வ புண்ணியம், பாக்கிய பலத்தால் வருவது. ஒருவரின் பாக்கிய பலத்தை குறிக்கும் இடம் 9-மிடம் என்றால் அவர் செய்த பாவத்தை குறிக்குமிடம் 8-மிடம். ஜோதிடத்தில் 8-ம் பாவத்தை கொண்டு எதிர்பாராமல் வரக்கூடிய துன்பங்கள், அவதூறுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். ஒருவர் கேட்காமலே வலிய வந்து உதவுகிறார் என்றால் பூர்வ ஜென்மத்தில் நமக்கு கடமைப்பட்டவர் என்றும், வலிய வந்து வம்பு இழுக்கிறார் என்றால் சென்ற ஜென்மத்தில் அவரை துன்புறுத்தியிருக்கிறோம் என்றும் பொருள்.

  ஒருவருடைய ஜென்ம லக்னத்திற்கு 9-ம் பாவகத்தை லக்கனமாகவோ, ராசியாகவோ கொண்டவர்கள், ஜென்ம லக்னத்திற்கு 9-ம் பாவ அதிபதியின் தசை நடப்பவர்கள் மூலம் உதவி கிடைக்கும். 9-ம் அதிபதி லக்ன கேந்திர, திரிகோணத்தில் இருத்தல், 9, 10-ம் அதிபதிகள் சம்பந்தம் பெறுதல், 9-ம் அதிபதி 3, 11-ம் பாவகங் களில் இருந்தால் உதவிகள் தேடி வரும். 9-ம் அதிபதி 6, 8, 12-ம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெற்றால் உதவிகள் கிடைக்காது.

  9-ல் நின்ற கிரகத்தின் சாரத்தில் ஒரு கிரகம் நின்று தசை நடத்தும் போதும், 9-ம் அதிபதியின் சாரத்தில் நின்று ஒரு கிரகம் தசை நடத்தும் போதும், 9-ம் அதிபதியின் தசா நடத்தும் போதும், 9-ம் பாவகம் தொடர்பான கிரகங்கள் கோட்சாரத்தில் லக்னாதிபதியுடன் தொடர்பு பெறும் காலத்திலும் 9, 10-ம் அதிபதிகள் கோட்சாரத்தில் 10-ம் அதிபதியுடன் இணையும் காலத்திலும் உதவிகள் தேடி வரும்.

  அனைத்து மனிதர்களும் எதிர்பார்ப்பது பொருள் உதவி எனும் பணப்பரிவர்த்தனை. சீரான பண வரவு தொழில், உத்தியோகத்தினால் மட்டுமே கிடைக்கும். இதை தவிர்த்து நெருங்கிய ரத்த பந்த உறவுகள் மூலம் கிடைக்கும் வரவே உண்மையான உதவி.

  ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கு 2மிடம் தனம் வாக்கு குடும்ப ஸ்தானம், 11மிடம் லாபஸ்தானம். 9மிடம் பாக்கிய ஸ்தானமாகும். 4மிடம் அசையும், அசையா சொத்து ஸ்தானமாகும். 10மிடம் தொழில் ஸ்தானமாகும். தன ஸ்தானாதிபதி 1, 4, 5-ம் அதி பதிகளுடன் சேர்க்கை பெற்றாலும், 9-ம் அதிபதி 1, 2, 4, 5 10, 11-க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும் பரிவர்த்தனைப் பெற்றாலும் 10ம் அதிபதி 1, 2, 4, 5, 11-ம் அதிபதிகளுடன், சேர்க்கை பெற்றாலும், 11-ம் அதிபதி 1, 2, 4 5-ம் அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும் லக்னாதிபதி 4, 5-க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும் உறவுகள் மூலம் தாராள பொருள் வரவு, உதவிகள் கிடைக்கும்.

  மிகச் சுருக்கமாக தன அதிபதி எந்த கிரகத்துடன் சேர்க்கை பெறுகிறதோ, அந்த பாவம், அந்த காரக கிரக உறவு மூலம் தாராளமான பொருள் வரவுகள், உதவிகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். உறவுகள் மூலம் கிடைக்கும் உதவிக்கு ஜோதிட ரீதியான விளக்கத்துடன் பார்க்கலாம்.

  தந்தை: மனிதனுக்கு உயிர் கொடுத்த உறவு தந்தை. ஜென்ம லக்னத்திற்கு 9மிடம் தந்தை ஸ்தானம். தந்தைக் காரகன் சூரியன். ஒருவர் ஜாதகத்தில் 2, 9-ம் அதிபதியுடன் சூரியனும் பலம் பெற்றிருந்தாலும் தந்தை மூலமாக தாராள தன வரவு உண்டாகும். குறிப்பாக 9-ம் அதிபதி வலுவாக அமையப் பெற்று 2, 4-க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும் தந்தை மூலமாக தாராள தன வரவுகள், தந்தையால் கவுரவம் குலத்தொழில் மூலம் வருவாய், பூர்வீகச் சொத்துக்கள் என அனைத்துவிதமான பாக்கியங்களும் கிடைக்கும்.


  பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

  தந்தைக்கு போதிய தன வரவு, பூர்வீகச் சொத்து, நல்ல குலத் தொழில் இருந்தும் பயன் பெற முடியாதவர்கள் 27 ஞாயிற்று கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையான சூரிய ஒரையில் சிவ வழிபாடு செய்து வந்தால் தந்தையின் உதவிகள் தேடி வரும்.

  தாய்: மனிதனுக்கு உடல் கொடுத்த உறவு தாய். ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கு 4-ம் இடம் தாய் ஸ்தானமாகும். 2-ம் அதிபதியும் 4-ம் அதிபதியும் இணைந்திருந்தாலோ, பரிவர்த்தனைப் பெற்றாலும், சுபர் வீட்டில் அமையப் பெற்று சுபர் பார்வை பெற்றாலும், இருவரும் இணைந்து பலம் பெற்றாலும் தாய் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். ஸ்திர சொத்துக்கள் மூலம் வாடகை வருமானம் உண்டாகும். கற்ற கல்வியால் நன்மை உண்டாகும்.

  அதுபோல தாய் காரகன் சந்திரன் 2, 4-க்கு அதிபதிகளுடன் இணைந்து பலமாக அமையப் பெற்றால் தாய் வழியில் நல்ல அனுகூலம் மிகுந்த பலன்கள் உண்டாகும். தாய் வழிப் பூர்வீகச் சொத்துக்கள் விவசாய நிலங்கள் மற்றும் கால் நடை பாக்கியங்கள் கிடைக்கும்.

  தாயாருக்கு நிலையான வருமானம், அசையும் அசையாச் சொத்துக்கள் இருந்தும் தாயார் மூலம் போதிய உதவிகள் கிடைக்காதவர்கள் 21 வாரம் திங்கட்கிழமை காலை 6மணி முதல் 7 மணிக்குள் மாரியம் மனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபட அன்னையின் ஆசியும் உதவியும் தேடி வரும்.

  தாய்மாமன்: தாய், தந்தைக்குப் பிறகு ஒருவருக்கு தாய் மாமன் உறவும், உதவியும் மிக முக்கியம். ஜனன கால ஜாதகத்தில் 5-ம் இடம் பலம் பெற்றவர்களுக்கு தாய்மாமன் ஆதரவும் உதவியும் தேடி வரும்.

  2-ம் அதிபதியும் 5-ம் அதிபதியும் இணைந்திருந் தாலும் பரிவர்த்தனைப் பெற்றாலும், சுபர் வீட்டில் அமையப் பெற்று சுபர் பார்வை பெற்றாலும், இருவரும் இணைந்து பலம் பெற்றாலும் தாய்மாமன் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். 2, 5-ம் அதிபதிகளுடன் புதனும் வலிமை பெற்றால் தாய் மாமன் மூலம் அதிர்ஷ்டச் சொத்து, பங்குச் சந்தை ஆதாயம், புகழ், அந்தஸ்து, கவுரவம், கவுரவப் பதவிகள், அரசியல் ஆதாயம் போன்ற உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு தாய்மாமன் சீர் மிகுதியாக கிடைக்கும். சிலருக்கு தாய்மாமன் ஆதரவில் பொருளாதாரத்தில் திருமணம் நடக்கும்.

  தாய்மாமன் ஆதரவு குறைந்தவர்கள் அல்லது தாய் வழிச் சொத்தில் தாய் மாமாவுடன் கருத்து வேறுபாடு இருப்பவர்கள் 9 புதன்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மகா விஷ்ணுவிற்கு துளசி மாலை அணிவித்து வழிபட தாய்மாமன் அன்பும் உதவியும் கிடைக்கும்.

  சித்தப்பா: ஒரு மனிதன் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொடரும் உறவுகளில் ஒன்று சித்தப்பா. நெருங்கிய ரத்த பந்த உறவு. ஜென்ம லக்னத்திற்கு 11-ம் அதிபதி 2-ம் அதிபதியும் இணைந்திருந்தாலோ, பரிவர்த்தனைப் பெற்றாலும், சுபர் வீட்டில் அமையப் பெற்று சுபர் பார்வை பெற்றாலும், இருவரும் இணைந்து பலம் பெற்றாலும் சித்தப்பா வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

  2, 11-ம் அதிபதியுடன் சனி பலம் பெற்றால் பூர்வீகச் சொத்து தொடர்பான கருத்து வேறுபாடு வராது. சித்தப்பாவுடன் இணைந்து கூட்டுத் தொழில் நடத்தும் வாய்ப்பு அமையும். அவருடன் கூட்டுக் குடும்பமாக வசிப்பார்கள். சிலர் சித்தப்பாவின் வளர்ப்பு பிள்ளையாக வாழ்வார்கள். அவரின் உதவிகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும்.

  சித்தப்பாவின் உதவி கிடைக்காதவர்கள், பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகளால் சித்தப்பாவுடன் கருத்து வேறுபாடு வம்பு, வழக்கு இருப்பவர்கள் 9 வாரம் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 9 மணி வரையான சனி ஒரையில் 26 எள் உருண்டைகள் 27 பேருக்கு தானம் தர உறவும், உதவியும் நீடிக்கும்.

  சகோதரன்: ஒரு மனிதனுக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் உடன் பிறப்பு என்ற பந்தம் மனதில் தெம்பையும், தைரியத்தையும் தரும் தொப்புள் கொடி உறவு. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது பழ மொழி. ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கு 3மிடம் இளைய சகோதர ஸ்தானம். 11மிடம் மூத்த சகோதர ஸ்தானம். சகோதர காரகன் செவ்வாய்.

  1, 3 அதிபதிகள் 2-ம் இடத்துடன் சம்பந்தம் பெற்றாலும் 3, 11-ம் அதிபதிகள் 2-ம் இடத்துடன் சம்பந்தம் பெற்றிருந்தாலும் உடன் பிறந்தவர்கள் வகையில் அனுகூலங்கள் ஏற்றங்கள் உண்டாகும். செவ்வாய் வலுப்பெற்று 3, 4, 11-ம் அதிபதிகள் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் உடன்பிறந்தவர்கள் வகையில் அனுகூலங்கள், அசையா சொத்து யோகம், கூட்டுத் தொழில் யோகம், தாராள தன சேர்க்கை, உதவி உண்டு.

  ஜனன கால ஜாதகத்தில் செவ்வாயும் 3, 11-ம் அதிபதியும் பலவீனமாக இருந்தால் 27 வாரம் செவ்வாய்க்கிழமை காலை 6 -7 வரையான செவ்வாய் ஓரையில் முருகனுக்கு அரளி மாலை அணிவித்து வழிபட உடன் பிறப்புகள் ஒன்று கூடி மகிழ்வார்கள்.

  வாழ்க்கை துணை: ரத்த பந்தம் அல்லாத நட்புக்காக, அன்பிற்காக வாழ்வின் இறுதி வரைத் தொடரும் உறவு வாழ்க்கை துணை. வாழ்வின் ஏற்ற இறக்கத்தில் தோள் கொடுத்து உதவும் உறவும. ஜென்ம லக்னத்திற்கு 7-ம் பாவகம் களத்திர ஸ்தான மாகும். பெண் ஜாதகத்தில் கணவரை குறிக்கும் கிரகம் செவ்வாய். ஆண் ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கும் கிரகம் சுக்ரன். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரனும் 7-ம் அதிபதியும் பலமாக இருந்தால் மனைவி மூலமாக தாராளமான தன வரவுகள், உதவிகள் உண்டாகும். திருமணத்திற்கு பிறகு அனைத்து விதமான வசதிகளும் கிடைக்கப் பெறும்.

  பெண் ஜாதகத்தில் செவ்வாயும்: 7-ம் அதிபதியும் பலம் பெற்றால் கணவரால் வாழ்நாள் முழுவதும் பாக்கிய பலன் உண்டு. திருமணத்திற்கு பிறகு கணவருக்கு தொழில், உத்தியோக ரீதியான மாற் றங்கள் உண்டாகும்.

  ஆதர்‌ஷன தம்பதிகளாக வாழ்வார்கள். குறிப்பாக 7-ம் அதிபதி 2, 4, 5, 9, 11-க்கு அதிபதிகளுடன் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் கேந்திர திரிகோண அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் வாழ்க்கை மூலமாக அசையா சொத்து சேர்க்கை அனுகூலங்கள், உதவிகள் உண்டாகும்.

  ஜனன கால ஜாதகத்தில் செவ்வாயும் 7-ம் அதிபதியும் பலம் குறைந்த பெண்கள் செவ்வாய் கிழமை துர்க்கை அல்லது காளிக்கு 27 எண்ணிக்கையில் 11 வாரம் எலுமிச்சை மாலை அணி வித்து வழிபட கணவரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். சுய ஜாதகத்தில் சுக்ரனும் 7-ம் அதிபதியும் பலம் இழந்த ஆண்கள் 11 வாரம் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையான சுக்ர ஓரையில் விநாயகருக்கு அருகம் புல் மாலை அணிவித்து வழிபட மனைவியின் அன்பும் உதவியும் கிடைக்கும்.

  நண்பர்கள்: நட்பால் மாமன், மச்சானாக வாழும் உறவு நண்பர்கள். மூழ்காத சிப்பே பிரண்சிப் தான். சுய ஜாதகத்தில் ஏழாமிடமும் புதனும் பலம் பெற்றால் நண்பர்களால் உதவி கிடைக்கும். 7, 10-க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றால் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்து தாராளமான தன வரவினை அடையும் அமைப்பு உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்காதவர்கள் புதன் கிழமை பச்சை நிற ஆடைஅணிந்து மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.

  இந்த ஜென்மத்தில் நமக்கு என்ன கொடுப்பினை உள்ளது, நாம் அனுபவிக்கப்போகும் நல்ல, தீய வினைகளின் பயன்கள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய இடம் பாக்கியஸ் தானம் எனப்படும் 9ம் இடம். உதவி செய்ய உறவுகள் இருந்தாலும் அதை பெற்று அனுபவிக்க கூடிய விதி இருந்தால் மட்டுமே உதவியால் முழுமையான பலன் உண்டாகும். இதைத்தான் ஜோதிடம் விதி, மதி, கதி என்று கூறுகிறது. ஜோதிட ரீதியாக லக்னம் என்பது விதியாக தலையெழுத்தாக அமைகிறது.

  மதி எனும் புத்தியாக 5மிடம் உள்ளது. கதி என்பது அவற்றால் இந்த பிறவியில் அடையும் பலனாக 9மிடம் உள்ளது. இந்த பிறவிக்கான புண்ணிய பலத்தை இந்த பிறவிலேயே அனுபவிக்க வேண்டும் என்பது தானே மனிதராய் பிறந்த அனைவரின் விருப்பம். இன்னல்கள் தீர வழி தெரியாமல் திணறிக் கொண்டு இருக்கும் அனைவரின் ஆதங்கமும் அது தானே.

  9-ம் பாவகம் வலுப்பெற்று அதற்குறிய தசைகள் பாக்கியங்களை அனுபவிக்க வேண்டிய வயதில் அனுபவிப்பவர்கள் பாக்கியவான்கள் . 9-ம் பாவகம் வலுப்பெற்று அதற்குரிய பாக்கிய பலன்கள் கிடைக்கப் பெறக்கூடிய தசைகள் பாக் கியங்களை அனுபவிக்க கூடிய வயதில் வராமல் வயதான காலத்தில் அனுபவிப்பவர்கள் அதிர்ஷ்ட சாலிகள். 9-ம் பாவகம் வலுப்பெற்று பாக்கியங்களை அனுபவிக்க கூடிய தசையே வராமல் எந்த உதவியும், ஆதரவும் இன்றி இருப்பவர்கள் இங்கே கூறப்பட்ட பரிகாரங்களை பயன்படுத்தினால் சுபபலன் உண்டாகும்.

  Next Story
  ×