என் மலர்

  செய்திகள்

  கர்ப்பரட்சாம்பிகை
  X
  கர்ப்பரட்சாம்பிகை

  குழந்தை பாக்கியம் கிடைக்கும் காலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுக்கிரன் பலம் இழந்தவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் மயிலாப்பூர் கற்பகாம்பாளை வெள்ளிக் கிழமை வழிபாடு செய்யலாம் . மற்ற ஊர்களில் சுக்கிரன் அம்சம் பொருந்திய அம்பிகையை வழிபாடு செய்யலாம்.


  ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும் போதும் ‘பதவி பூர்வ புண்ணி யானாம்’ என்ற முக்கியமான சொற்றொடரைச் சொல்வார்கள். அதாவது நம்முடைய இந்தப் பிறவிப் பயன், யோகம், அதிர்ஷ்டம், பாக்கியம், அம்சம் எல்லாம் நம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் ஏற்பட்ட கர்ம வினைப்படியே அமையும் என்பதாகும்.

  பூர்வ புண்ணியம் 5, 9-ம் அதிபதியின் தசா புத்தியோடு சம்பந்தம் பெற்று கோச்சார குரு கீரீன் சிக்னல் கொடுக்கும் காலமே குழந்தை பேறு கிடைக்கும் அறிவியல் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் ஆண்-பெண் சேர்க்கை இல்லாமலே குழந்தைகளை உருவாக்கலாம். சோதனை குழாயில் கரு முட்டை, உயிரணுவை இணைத்து குழந்தையை உருவாக்குகிறார்கள்.கருமுட்டை இல்லை என்றால் கரு முட்டை தானம் பெறலாம். உயிரணு தானம் பெறலாம். கருப்பையே இல்லை என்றாலும், தாயே இல்லை என்றாலும் கூட வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

  இறந்தவர்க்கு உயிர் கொடுக்க முடியாததை தவிர மனிதனால் தற்போது முடியாதது, நடக்காதது என்று எதுவுமே இல்லை. அதனால் குழந்தை இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் செயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சித்த அனைவருக்கும் வெற்றி கிடைக்காது. ஐந்து பேர் முயன்றால் 2, 3 பேருக்கு தான் வெற்றி கிடைக்கும்.. இயற்கை முறையோ செயற்கை முறையோ பிரபஞ்ச சக்தி அனுமதிக்காமல் உயிரை உருவாக்க முடியாது. பிரபஞ்ச சக்தியை மிஞ்சிய சக்தி மனிதனுக்கு இருந்தால் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடும் எல்லோருக்கும் குழந்தை கிடைக்க வேண்டுமே.

  இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் மே‌ஷம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க பரிபூரண வாய்ப்பு உள்ளது. செயற்கை கருத்தரிப்பை நாடுபவர்களுக்கு 2-1-2022 முதல் 1-3-2022 வரை மிகமிக அனுகூலமான காலம்.

  பொதுவாக குழந்தையின்மையால் மன வேதனை அனுபவிப்பவர்கள் குல தெய்வ வழிபாட்டையும், பித்ருக்கள் பூஜையையும் முறைப்படுத்த வேண்டும். மேலும் குல தெய்வ கோவிலுக்கு மணி வாங்கி வைக்கும் போது தடை, தாமதங்கள் சீராகும். அத்துடன் லக்னரீதியான ஐந்தாம் அதிபதிக்கு பரிகாரம் செய்தாலே பாதிப்பு நீங்கும்.

  அத்துடன் தஞ்சாவூர் அருகில் உள்ள திருக்கருகாவூர் சென்று முல்லைவனநாதருடன் அருள் பாலிக்கும் கர்ப்பரட்சாம்பிகையை வழிபாடு செய்யலாம். சந்தான கோபால ஹோமம் செய்ய குழந்தை பாக்கியம் உண்டாகும்.

  சுக்கிரன் பலம் இழந்தவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் மயிலாப்பூர் கற்பகாம்பாளை வெள்ளிக் கிழமை வழிபாடு செய்யலாம் . மற்ற ஊர்களில் சுக்கிரன் அம்சம் பொருந்திய அம்பிகையை வழிபாடு செய்யலாம்.

  சித்தர்கள் ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு , உடை , ஆடை, கல்வி கற்க உதவி செய்ய வேண்டும். மேலும் பிள்ளைகளால் மிகுதியான மன வேதனையை அனுபவிப்பவர்கள் காசி, கயை சென்று அங்கே பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்யவேண்டும். தில ஹோமத்தை ராமேஸ்வரம், தேவிபட்டினத்தில் செய்ய வேண்டும். அந்தணர்களுக்கு உணவு தானம் செய்ய வேண்டும். கன்றுடன் கூடிய பசுவைத் தானம் செய்ய வேண்டும்.

  குழந்தை பேறு எவ்வளவு பெரிய பாக்கியம் என்பது குழந்தை பேறுக்காக ஏங்குபவர்களுக்கு மட்டுமே புரியும். தனது குலம் செழிக்கவும், தனக்கு பின் தனது பெயர் சொல்லவும் ஒரு நல்ல வாரிசு வேண்டும் என்று தேடுதல் இல்லாத தம்பதியரை இப்புவியில் காண்பது அரிது, எவ்வளவோ மருத்துவ முன்னேற்றம் வந்த போதிலும் திருமணம் நடைபெற்று பல வருடங்கள் ஆகியும், ஒரு வாரிசுக்காக ஏங்கும் தம்பதியர்களுக்கு இங்கே பரிந்துரைக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் நல்ல பலன் தரும்.

  Next Story
  ×