என் மலர்

  செய்திகள்

  குடிக்கு அடிமையானவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்
  X
  குடிக்கு அடிமையானவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்

  மருத்துவம் அறிவோம் - குடிக்கு அடிமையானவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மருத்துவம் அறிவோம் என்ற தலைப்பில் கல்லீரல் வீக்கத்தின் பாதிப்புகள் குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

  இந்த தீபாவளி மக்களுக்கு சற்று மகிழ்ச்சி யாகத்தான் இருந்திருக்கும். வெளியில் செல்ல, நண்பர்கள், உறவினர்களோடு மகிழ்ச்சியாக இருக்க, விருந்து உண்ண என சற்று காய்ந்த மனசு ஈரமாகி பசுமையாய் இருந்திருக்கும். மனிதனுக்கு இதுதானே வேண்டும். மனமகிழ்ச்சி என்பது எதையும் சாதிக்கக் கூடிய பணத்தால் மட்டுமே கிடைத்து விடாது. அது தான் மகிழ்ச்சி, நிம்மதி இவைகளின் தனித்தன்மை. பலர் கோவில்களுக்கு சென்று வழிபட்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர். பார்க்கவே மனம் லேசாகி பறந்தது. சரி, இவையெல்லாம் பொதுவாக வருடா வருடம் நிகழ்பவைதான். ஆனாலும் கூடவே சில குடும்பங்களில் வேறு வித நிகழ்வுகளும் ஏற்படுகின்றன. நமக்கு பாரம் பரியமாக இருக்கும் பழக்கம் பண்டிகை நாட்கள் என்றால் மேலே குறிப்பிட்ட படி இருப்போம்.

  காலத்தின் மாற்றம் இன்று பண்டிகை, லீவு நாட்கள், வீட்டு விசேஷங்கள் இப்படி எதுவாயினும் ஆல்கஹால்- மது இருப்பது அதிகமாய் காணப்படுகின்றது. நாகரிகம் என்ற பெயரில் சற்று மறைத்து செய்யப்பட்ட செயல் இன்று தலை நிமிர்ந்து நடக்கின்றது. இது பூஜை, பண்டிகை இவற்றினை மறந்து ‘பிரதான குடி’யாக மாறும் நிலையினையும் பார்க்கின்றோம். இதன் பாதிப்புகளை பற்றி பேசாத செய்திதாள்களோ, ஊடகங்களோ இல்லை. இருப்பினும் அதனுள்ளேயே மூழ்கி தன்னையும், தன் குடும்பத்தினையும் கெடுத்துக் கொள்ளும் பலருக்காகவே இந்த கட்டுரை எழுதப் பட்டுள்ளது. திரும்ப திரும்ப பல வழிகளில் மொடா குடியின் தீமைகளை வலியுறுத்தும் பொழுது ஆங்காங்கே ஒரு சிலராவது மாற வாய்ப்புகள் உள்ளது என்பதுதான் இதனைச் சொல்லும், எழுதும் அனைவரது நோக்கமாக இருக்கின்றது. மதுவுக்கு அடிமை என்ற நிலை ஏற்படாது இருக்க அவ்வப்போது இதுபோன்ற செய்திகள் அவசியமா கின்றன. வரும்முன் தவிர்ப்போம் என்ற வகையிலும், தகுந்தகவனம் கொள்ள வேண்டும் என்ற முறையி லும் இதனைப் படித்து அனை வரும் பயன்பெற வேண்டும்என்பதே வேண்டுகோள், ஆசை. செய்வோமா?

  பல வருடங்களுக்கு முன்னால் நான் கண்ட ஒரு நிகழ்வினைப் பற்றி கூறுகின்றேன். இதனை முன்பே ஊடகத்தில் வெளியிட்டிருந்தாலும் இதனை இங்கு மீண்டும் கூறுவது, மது பெண்களை எந்த அளவு பாதிக்கின்றது என்பதற்காகவே. என்னிடம் சர்க்கரை நோய் சிகிச்சைக்காக வந்தார் ஒரு பெண்மணி. சற்று வறுமை பிரிவினை சேர்ந்தவர். முகத்தில் சோகம் நிரந்தரமாய் இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த நான் ‘அம்மா விருந்தும் வேண்டாம். உபவாசமும் வேண்டாம், என்று அறிவுறுத்தி இந்நோய்க்கான உணவு முறைகளைச் சொன்னேன். அப்பொழுது அவர் ‘அம்மா நீங்கள் சொல்வதை அப்படியே கடை பிடிக்கின்றேன்.

  ஆனால் வெள்ளிக்கிழமை மட்டும் நான் முழு விரதம். எதுவும் சாப்பிட மாட்டேன் என்றார். முழுநாள் விரதம் என்பது என்னை கவலைக் குள்ளாக்கியது. எவ்வளவு சொல்லியும் கேட்காத அவரிடம் ‘சரி, அப்படி என்னதான் காரணம் இந்த விரதத்திற்கு’ எனக் கேட்டேன். அவர் சொன்ன பதிலில் நான் உரைந்து போனேன். ‘அம்மா, என் கணவர் இறக்க வேண்டும். அதற்காக இந்த கடும் விரதம் இருக்கின்றேன்’ என அமைதியாக சொன்னார். சில நிமிடங்கள் என்னால் பேச முடிய வில்லை. ஒருவேளை புற்றுநோய் போன்ற பெரிய பாதிப்பு இருக்குமோ நாம் உதவ முயலலாமே என்று ‘அவருக்கு என்ன உடம்புக்கு?’ என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் ‘குடி எனும் அரக்கன் முழுமையாக அவன் தலையில் இறங்கி விட்டான். கொடுமை தாங்க முடியவில்லை. என் பையனை சிறு வயது என்றும் பாராமல் குடி வாங்கி வரச் செய்வான். ஒரு பைசா கையில் இல்லை. இந்நிலையில் என் பையனும் இவனைப் பார்த்து இவ்வாறு ஆகி விடுவானோ என்ற கவலை இருக் கின்றது. ஆகவே தான் இறைவனிடம் மன்றாடு கின்றேன். இனி அவன் திருந்த வாய்ப்பே இல்லை. என் பிள்ளையையாவது நான் காப்பாற்ற வேண்டும்‘ என்றார்.

  எனக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. மருத்துவ ரீதியான உதவிகளை, அறிவுரைகளை செய்தேன். அந்த அம்மாவும் சென்று விட்டார். சில வருடங்கள் கழித்து (அப்பத்தான் ஞாபகம் வந்தது) வந்து என்னை சந்தித்தார். அவரது கணவர் மறைந்து விட்டதாக கூறினார். குடியின் பாதிப்பும், இந்த பெண்ணின் வேதனையும் மிக அதிகமாக அவரைத் தாக்கியிருக்க வேண்டும் என மனம் எண்ணியது. சில காலம் சென்று மீண்டும் வந்து சந்தித்து பிள்ளைக்கு கல்யாணம் என்று கூறினார். ஒரு தாயாக தனித்து தன் பொறுப்புகளை ஆற்றியுள்ளார் என்று நினைத்தேன். ஆனால் இதிலும் ஒரு சுழல் ஏற்பட்டது. ஒரு நாள் வழியில் அந்த அம்மாவை சந்திக்க நேரிட்டது. பார்த்த உடனேயே உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது- நன்கு தெரிந்தது. அவரே அருகில் வந்தார். ‘நான் மீண்டும் வெள்ளிக்கிழமை விரதம் இருக்கிறேன்’ என்றார்.  எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மீண்டுமா? யாருக்காக? உங்களுக்கென்ன மனதில் எமன் என்று நினைப்பா? எண்ணத்தாலும் பிறருக்கு தீங்கு இழைக்கக் கூடாது என்று வலியுறுத்தப்படுகின்றது. நீங்கள் எண்ணத்தால் கொலையே செய்கின்றீர்களே? இதெல்லாம் நியாயமா? எனப் பதறினேன்.

  மனதை கல்லாக்கி அந்த அம்மா கூறியது ‘என் மகனுக்காக இதனை நான் செய்கின்றேன். குடியில் அவன் அப்பனை மிஞ்சி விட்டான். நான்பட்ட வேதனைகள் பத்தாது என என் மருமகளும் அவதிப்படுகின்றாள்’ என நியாயம் பேசினார். என்னால் பதில் பேச முடியவில்லை. அந்த அம்மாவினை சரி என்பதா, தவறு என்பதா எனப் புரியவில்லை. இதற்கு பதிலாக விவாகரத்து பெற்று சென்றிருக்கலாமே என மனம் எண்ணியது. இங்கு நான் சொல்ல வருவது பொறுமையில் உயர்ந்தவளான ஒரு பெண்னையே மனதால் கொலைகாரி ஆக்கி விடும் அளவு ஆணின் குடிப்பழக்கம் உள்ளது. இதேபோல் மற்றொரு பெண்மணியும் ஒரு முறை தன் கணவரைப் பற்றி குறிப்பிடும் பொழுது அவன் தலையில் பாறாங்கல்லை போட்டு உடைக்கணும் போல் கோபம் வருகின்றது என்றார். பலர் ஆணின் கொடுமைகளைத் தாங்காமல் பல தவறுகளை செய்து சிறையில் காலம் தள்ளுகின்றனர். சரி மற்றவர்களை விடுங்கள் ‘குடிக்கு அடிமை யான வருக்கு நிகழும் பாதிப்புகளை பாருங்கள்’

  ஜீரண மண்டலம்:

  அரித்து எடுத்து விடும். முறையற்ற அளவில் கணையத்தின் மூலம் ஜீரண என்சைம்கள் உண்டாகும்.  இந்த என்சைம்கள் கூடும் போது கணையத்தில் வீக்கம் உண்டாகும். ஜீணீஸீநீக்ஷீமீணீtவீtவீs  எனப்படும் இந்த வீக்கம் தரும் வலி பாதிக்கப்படுபவரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. புழுவாய் துடிப்பார். மது பழக்கம் உள்ளவர்கள் இதனையும் மீறி குடிக்கும் போது கால்ஷியம் கற்கள், நீஹ்st எனப்படும் நீர்கட்டிகள் கணையத்தில் உண்டாகும். கணையத்தில் சுரக்கும் என்சைம்கள், திரவங்கள் வயிற்றுக்கு செல்ல முடியாமல் கணைய குழாய் அடைபட்டுவிடும். இதனால் செரிமான என்சைம்கள் இல்லாமை, ஹார்மோன் இல்லாமை ஏற்படும். இதன் விளைவாக உணவு செரிக்காது. ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும். இதனால் உடலில் சத்து குறைபாடு ஏற்படும். சர்க்கரை நோய் ஏற்படும். உடலும் விடாது அறிகுறிகளை காட்டி மனிதனை திருந்தச் சொல்லும்.

  அந்த அறிகுறிகள்:-

  மேல் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்  பிரட்டல், வாந்தி, மூச்சு வாங்குதல், காரணமின்றி இளைத்தல், அதிக தாகம், அதிக சோர்வு, மஞ்சள் காமாலை ஏற்படும். வலி மாத்திரை, என்சைம் மாத்திரை, இன்சுலின் செலுத்துதல் என மருத்துவர் களும் பாதிக்கப்பட்டவரோடு முழு முனைப்பாய் சிகிச்சை அளிப்பார்கள். சிலருக்கு கணையத் தினை எடுக்க வேண்டிய கட்டாய நிலை கூட வரலாம்.

  இத்தகைய பாதிப்பு உடையவர்கள் மதுவினை அடியோடு நிறுத்துவதோடு, புகைபிடித்தலையும் அடியோடு நிறுத்த வேண்டும். கணையத்தினை பொறுத்தவரை முக்கியமான பாதிப்புகளை குறிப்பிட்டுவிட்டோம். மற்றபடி பெரிதாக ஒன்றுமில்லை. குடி முக்கியமா? கணையம் முக் கியமா? என்பதனை மதுபழக்கம் உடையவர்கள் ஒவ்வொருவரும் நல்ல நிலையில் இருக்கும் போது நன்கு சிந்திக்க வேண்டும்.  மனதிற்கு இருக்கும் வலிமை மிக அதிகம். இதனை மனதில் பதிய வைத்தால் மது பழக்கத்தில் உள்ளவர்கள் ஓரளவாவது தன்னை மாற்றிக்கொள்வார்கள்.

  நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்:

  ஆல்கஹால் ஒருவரை அதிகம் பாதித்து இருப்பதை முதலில் அவரது குளறிய பேச்சு காண்பித்துவிடும். மூளைக்கும், உடலுக்கும் உள்ள தொடர்பு குறைந்துவிடும். நடப்பதே கடினமாக இருக்கும். கை, கால்களில் மதமதப்பு இருக்கும். மறதி ஏற்படும். மூளையின் முன்மடல் சுருங்கும். இதனால் சுய கட்டுப்பாடின்மை, மறதி என பல முக்கிய செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்.

  வைட்டமின் பி சத்து குறைபாடு, கண் பார்வையில் கோளாறு என இருக்கும். பொய்யான பெரிய கதைகளைச்  சொல்வார்கள். சத்து குறைபாடு உடலில் அதிகமாக இருக்கும். எதையும் புரிந்து கொள்ளும் சக்தி இருக்காது. வயிற்றில் உப்பிசம், வயிற்றுப் போக்கு, பைல்ஸ் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் வாய், தொண்டை, உணவுக்குழாய், குடல், கல்லீரல் இவற்றில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மற்றபடி இதற்கு மேல் பாதிப்புகளை பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை புரிந்ததா?

  குடிபழக்கம் இதயம் மற்றும் நுரையீரலை கடுமையாய் பாதிக்கின்றது. இதன் அறிகுறிகளாக உயர் ரத்த அழுத்தம், முறையற்ற இதயதுடிப்பு, பக்கவாதம், மாரடைப்பு, இதய நோய்கள், நுரையீரல் பாதிப்பு, நிமோனியா, டி.பி. பாதிப்பு, வைட்டமின்கள், தாது உப்புகளை உடல் உள் ஏற்க முடியாமல் ஏற்படும் ரத்த சோகை என அநேக பாதிப்புகள் ஏற்படலாம்.

  எலும்புகள் பலவீனமாகலாம். நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாய் குறையலாம். சமுதாய பிரச்சினைகளும் குடும்ப பிரச்சினைகளும் மிக அதிகமாகலாம். அதிக குடி பழக்கம் வந்துவிட்ட பெண்களுக்கு கர்ப்பம் தங்குவதில் கூட பிரச்சினை ஏற்படுகின்றது.
  நம் உடலில் ஒரு பெரிய ஹீரோ கல்லீரலும் தான். தலையாய வேலையாக நச்சுப்பொருட்களை நம் உடலில் இருந்து நீக்குகின்றது. மதுவினையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ஆனால் தொடர் குடியிலும், மொடா குடியிலும் இருக்கும் போது கல்லீரலும் பலம் இழக்கின்றது.

  இந்த தொடர் குடி கல்லீரல் வீக்கத்தினையும், கல்லீரல் நோயினையும் உருவாக்குகின்றது. இது அதிக வடுக்களை கல்லீரலில் உருவாக்குகின்றது. இது நீடிக்கும் போது கல்லீரலால் முறையாய் வேலை செய்ய முடியாது. கல்லீரல் மட்டுமே சுமார் 500 வேலைகளை நம் உடலில் செய்கிறது. மேலும் ஆரம்ப காலத்தில் கல்லீரலில் கொழுப்பு சேரலாம். வீக்கம் ஏற்படலாம். இதனை முறையாய் கவனிக்காத போது வடுக்கள் ஏற்படலாம். கல்லீரல் பாதிப்பின் வெளிப்பாடாக,

  * வயிற்றுப் பிரட்டல், பசியின்மை, சோர்வு, வயிற்றில் சங்கடம், அதிக தாகம், வயிற்றில் வீக்கம், கால்களில் வீக்கம், கறுத்த கழிவு வெளியேற்றம், மயக்கம், ஒருவித முரட்டுத்தனம், மனக்குழப்பம், ஈறுகளில் ரத்தக்கசிவு, ஆண்களின் மார்பகங்கள் சற்று பெரிதாகுதல், போன்ற  சின்ன சின்ன பாதிப்புகள் ஏற்படலாம்.

  மருத்துவ முன்னேற்றமும் இதனை சீர் செய்ய படாதபாடு படும். ஆனால் அது முழு வெற்றியினைத் தரும் என்று கூற முடியாது. மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சை கூட இன்று உள்ளது. அனைவராலும் அத்தகைய செலவினை தாக்குப்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

  கல்லீரல் பாதிப்பு என்பது மருத்துவ உலகில் கடுமையானதாகவே பார்க்கப்படுகிறது. நாகரீக முன்னேற்றம் காரணமாக இன்று இளம் பெண்களும் குடிக்கின்றனர். கல்லீரல் பாதிப்பு என்பது ஆண்களை விட வேகமாகவே பெண்களை பாதிக்கின்றது.
  கணையமும், கல்லீரலும் சிறப்பாக இயங்காவிடில் பாதிக்கப்பட்டவரின் வாழ்வு ஒவ்வொரு நிமிடமும் கவலையும், வேதனையும் கொண்டதாகிறது. உணவில் அதிகக் கட்டுப்பாடு, அதிக மருத்துவ செலவு, உடல் உபாதை என நரக வேதனையை அனுபவிக்கின்றனர். மற்றபடி பெரிதாக ஒன்றுமில்லை.

  குடிப்பழக்கத்தால் மூட்டுகளில் வலி, யூரிக் ஆசிட் அதிகரிப்பு, எளிதாய் கிருமி, வைரஸ் தாக்குதல் ஆகியவற்றுக்கு ஆட்படலாம்.
  தூக்கம் என்பதே சரிவர இருக்காது. இத்தனை பாதிப்புகளைத் தரும் ‘குடி’ மனிதனுக்கு தேவையா? சிகரெட் என்ன யோகா பயிற்சியா? குடி, சிகரெட் இரண்டுமே ஒரு தனி மனிதனை மட்டும் அழிப்பதில்லை. அவன் குடும்பத்தினையே அழித்து விடுகின்றது. ஒவ்வொருவரும் இதனை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
  Next Story
  ×