search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராசிபலன்
    X
    ராசிபலன்

    இந்த வாரம் ராசி எப்படி? பிரசன்னா ஜோதிடர் ஆனந்தி

    இந்த வாரம் ராசி குறித்து பிரசன்னா ஜோதிடர் ஆனந்தி ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    மேஷம்

    மேஷ ராசிக்கு இது அதிர்ஷ்டமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஏழில் 5-ம் அதிபதி சூரியனுடன்,  இணைந்துள்ளார். செவ்வாயின் பார்வை ராசி மற்றும் தன ஸ்தானத்தில் பதிகிறது. புதன் பார்வையும் ராசியின் மீது விழுவதால் ராஜயோகம் உண்டு.  தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் நேரமிது. பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும்.

    தடைபட்ட  அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலை பார்ப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள பாக்கி கைக்கு வரும். சிலருக்கு இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும்.

    பெண்களுக்கு மாமியார் நாத்தனாரால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். கல்லூரி உயர் கல்வி மாணவர்கள் பழைய நண்பர்களைப் பார்த்து மகிழ்வீர்கள். 5-11-2021 இரவு 9.04 முதல் 7-11-2021 இரவு 9.04 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் 5-11-2021-க்கு முன்பு தொழில் ஒப்பந்தங்களை நன்றாக படித்த பின்பு கையெழுத்திடவும்.

    ரிஷபம்

    புத்தி சாதுர்யத்துடன் செயல்பட வேண்டிய காலம். கடந்த வாரம் சுக்ரன், செவ்வாய் பரிவர்த்தனையால் ஏற்பட்ட தம்பதிகளின் கருத்து வேறுபாடு மறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். ராசி அதிபதி சுக்ரன் 8-ல் மறைவதால் இது தடை, தாமதங்களை சமாளிக்க வேண்டிய நேரம்.

    தைரியம், தெம்பு அதிகரிக்கும். கூலித் தொழிலாளிகளுக்கு இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து வேலை கிடைக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் போனஸ் மனதை மகிழ்விக்கும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பணப் புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும்.

    பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்வீர்கள். ஊழியர்களுக்கு  தீபாவளிக்கு ஆடை, இனிப்பு வழங்குவீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் சனி இருப்பதால் தொழில், வியாபாரத்தில் முன் நின்று போட்டிகளை சமாளிப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும். அஜீரண கோளாறு ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு தடைபட்ட பணிகள் துரிதமாகும்.

    மிதுனம்

    அற்புதமான வாரம். ராசிக்கு 5-ல்  சூரியன், செவ்வாய், புதன் என மூன்று கிரகங்கள் இணைந்து இருப்பதால் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். அண்டை, அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். வீண் அலைச்சல், துக்கம் விலகும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தடைகள் வந்தாலும் களத்திர ஸ்தானத்தில் உள்ள சுக்ரன் திருமண வாழ்க்கையில் சாதகமான நிலையைத் தருவார்.

    உங்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும், வேலையில் இடமாற்றம் ஏற்படும். சொந்த தொழில் தொடங்கலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். நல்ல தசாபுத்தி நடைபெறும் பட்சத்தில் சாதகமான நேரம் ஏற்படும்.

    புதிய தொழில் தொடங்கலாம்.புகுந்த வீட்டாருடன் ஏற்பட்ட  கருத்து வேறுபாட்டால் பிறந்தவீட்டிற்கு வந்த நாத்தனார் மீண்டும் புகுந்த வீடுசெல்வார். பெண்களுக்கு மன நிம்மதியும், முன்னேற்றமும் உண்டாகும்.
     
    கடகம்

    ஆரவாரமான வாரம். ராசிக்கு ஏழில் குரு, சனி சேர்க்கை ராசிக்கு குரு, சனி பார்வை. ராசிக்கு நான்கில் 2-ம் அதிபதி சூரியன்  3-ம் அதிபதி புதன், 5-ம் அதிபதி செவ்வாய் என அற்புதமான கிரகச் சேர்க்கை உள்ளதால் தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    கொடுக்கல்  வாங்கலில் இருந்த தடை தாமதம் விலகும். எதிர்பார்த்த தொகை உடனே கைக்கு வந்து சேரும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். அதற்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் சகோதரரின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.

    வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும், சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் தான அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்ப்பதால் பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். இருக்கிற வேலையில் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் மாமன் வழி ஆதாயம் உண்டு.

    சிம்மம்

    வாழ்வில் புதிய மாற்றம் ஏற்படப் போகும் நேரம். ராசிக்கு 3-ல் ராசி அதிபதியுடன் தன லாப அதிபதி புதன், யோகாதிபதி செவ்வாய்  சேர்க்கை என கிரகங்களின் சஞ்சாரம் உங்களை புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறது. சுப கிரகங்கள் மிகச் சாதகமாக உள்ளன. குடும்பம் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்கும்.

    வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வீடு தேடி வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும்.  குடும்பத்தோடு இணைந்து சுற்றுலா செல்வீர்கள். தந்தையின் வாரிசு வகையில் அரசு வேலை கிடைக்கும். தந்தையாகும் பாக்கியம் கிடைக்கும்.

    மன வேதனையைத் தந்த மகள் உங்களைப் புரிந்து கொள்வார். கணவருடன் இருந்த ஈகோ மாறும். பாராமுகமாக இருந்த உறவுகள்  சுபநிகழ்வில் மீண்டும் இணைந்து அன்பு பொழிவார்கள். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும்.திருமணம் கை கூடும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வரும். இல்லத்தரசிகளுக்கு இது ரொம்ப நல்ல வாரம் . ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.
     
    கன்னி

    புத்தியை தீட்ட வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் விரய அதிபதி சூரியனுடன் தன ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி செவ்வாயுடன்  சேர்ந்து இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டிய வாரம்.

    கணவன்-மனைவி இடையே சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. காதலர்கள்  விட்டுக்கொடுத்து செல்லவும்.  காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரலாம் சண்டை வந்தாலும் சமாதானமாக செல்வது அவசியம். பெண்களுக்கு  இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும்.

    அதற்குத்தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலைப்பளுவும் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவைப்படும் மாதமாகும். உணவு விசயத்தில் கவனம் தேவை. பெரிய அளவிளான எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம். தொழில் உத்தியோகத்தில் நிதானம் தேவை.

    துலாம்

    நினைப்பது எல்லாம் நடக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் சகாய  ஸ்தானத்தில் இருப்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.  எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தை விற்று புதிய வீடு வாங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.

    பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி
                                                     பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

    தங்கம் வாங்குவீர்கள். வீண் அலைச்சல் தூக்கமின்மை அதிகரிக்கும். வியாபாரத்தில் தேங்கிய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தி யோகத்தில் அதிக நேரம் வேலை பார்ப்பீர்கள். தொழில், வேலையில் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். மனதிற்கு பிடித்த வரன் அமையும்.

    பெரியோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கை கூடி வரும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புத மாக இருக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  புதன், சூரியன் இணைந்து ராசியில் இருப்பதால்  மாணவர்களுக்கு கல்வியில் முன் னேற்றத்தை ஏற்படுத்தும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கோபத்தை குறைப்பது நல்லது.

    விருச்சிகம்

    விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி  செவ்வாய் 10-ம் அதிபதி சூரியன் மற்றும் லாப அதிபதி புதனுடன் ராசிக்கு 12-ல் இணைந்திருப்பதால் தொழில் வியாபார ரகசியங்கள் கசியும். தொழில் போட்டிகள் உருவாகும். வியாபாரத்திற்கு நம்பகமான வேலை ஆட்கள் தேடுவீர்கள். மேல் அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

    உயர் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர் களால் டென்ஷன் உண்டாகும். கொடுக்கல் வாங்க லில் கவனம் தேவை. நெடுந்தூர பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். பண்டிகைகள் விழாக்களில் கலந்து கொண்டு ஆனந்தமடைவீர்கள். புதிய முயற்சி களுக்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்பு குறைவு. யாரையும் நம்பி வாக்கு கொடுக்க வேண்டாம்.

    பிறருக்கு ஆலோசனை வழங்குவதால் மனக்கசப்பு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து மோதல்கள் குறையும் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உணவு விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

    தனுசு

    நினைத்ததை நடத்தி முடிக்கும் வாரம்.  6, 11-ம் அதிபதி சுக்ரன் ராசியில் இருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். மூத்த சகோதரர் வகையில் சில சாத கங்களும் பல பாதகங்களும் உண்டாகும். சொத்து விசயத்தில் இருந்த வழக்குகள் சாதகமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் மூலம் தொழில், வியாபாரம் விரிவடையும். சொத்துக்கள் விற்பனையால் ஆதாயம் உண்டு.

    எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத் திற்கு தற்போது  பலன் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 6-ம் அதிபதி சுக்ரன் ராசியில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறிய பதிப்பு தோன்றினாலும்  சமாளித்து விடு வீர்கள். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையத் துவங்கும்.

    மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், சாலையோர நடைபாதை வியாபாரிகளின் லாப விகிதம் அதிகமாக இருக்கும். போட்டி, பொறாமையால் கண் திருஷ்டி உண்டாகும். மைத் துனரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். மறு திருமண முயற்சி சாதகமாகும்.

    மகரம்

    சாதகமான வாரம். ராசிக்கும் 10ம் இடத்திற்கும் சனி, செவ் வாய் சம்பந்தம் இருப்பதால் மெக் கானிக் மற்றும் இயந்திரப் பணியா ளர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு. நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி  நன்மை உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அசையாச் சொத்து வகையில் அனுகூலங்கள் உண்டாகும்.

    வண்டி , வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. குருவின் பார்வை 5, 9-ம் இடத்திற்கு இருப்பதால் பாக்கிய பலன்கள் உண்டாகும். இளவயதினருக்கு புத்திர பிராப்தி உண்டாகும். வயோதிகர்களுக்கு தாத்தா, பாட்டி யோகம் உண்டு. ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும்,  முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும்.
    திருமணத் தடை அகலும். தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும்.  வரவு செலவு சீராக இருக்கும். 1-11-2021 அன்று மாலை 6.39 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில், வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படவும்.

    கும்பம்

    நிதானத்தை கடை பிடிக்க வேண்டிய வாரம். ராசி அதி பதி சனியும் தன, லாப அதிபதி குருவும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் உழைப்பது நீங்கள், நல்ல பெயர் வாங்குவது உங்களை விரட்ட நினைக்கும் சக ஊழியராக இருப்பார். ராசி அதிபதி பனிரெண்டில் மறைவதால் காதலிப்பவர்கள் பெற்றோர்  மற்றும் உடன் பிறந்த வர்கள் மற்றும் உங்களின் எதிர் காலத்தையும் கருத்தில் கொண்டு தவறான முடிவு எடுக்காமல் இருப்பது நல்லது.

    உங்கள் குல அல்லது இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத் தும் சுபமாகவே இருக்கும். திருமண சுப காரியங் களுக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றியுண்டு. காதல் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரலாம். அதிக பேச்சு வேண்டாம் வீட்டுக்கொடுத்து செல்லவும். மாணவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பாக கவனமும் நிதானமும் தேவை.

    1-11-2021 மாலை 6.39 முதல் 3-11-2021 இரவு 8.53 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மனக்குழப்பம், பதட்டம் அதிகரிக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உணவு விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

    மீனம்

    விபரீத ராஜ யோகம். ராசி அதிபதி குருவும், லாப அதிபதி சனியும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பு. 6ம் அதிபதி சூரியனும், இயற்கை பாவி செவ்வாயும்  8ல் மறைவதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்.திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. யார் அக்கவுண்டிலோ ஏற வேண்டிய பணம் . உங்கள் அக்கவுண்டில் ஏறும் . குறைந்த விலைக்கு பொருள் வாங்கி அதிக விலைக்கு விற்பதில் கைதேர்ந்தவர்களாகி விடுவீர்கள்.

    பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்து சம்பாதிப்பார்கள். விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பவர்களுக்கும் ஏற்ற காலம்.

    ராசிக்கு எட்டில் செவ்வாய் கோட்சார ரீதியான செவ்வாய் தோஷத்தால் திருமண வாய்ப்பு தடைபடலாம். 3-11-2021 இரவு 8.53 முதல்   5-11-2021 இரவு 9.04 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல், ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம். எதிலும் ஈடுபாட்டு டன் இருக்க முடியாது. வாகனங்களில் சென்று வரும் போது கவனம் தேவை.
    Next Story
    ×