search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஷ்பு
    X
    குஷ்பு

    குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - கெட்ட வார்த்தை சொல்லி பட்ட பாடு

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    மொழி !
    அதுதான் நம்மை ஒருவருக்கொருவர் இணைக்கிறது. ‘தமிழ்’ அழகிய மொழி! இன்று எனது தாய்மொழி போல் ஆகிவிட்டது. நன்றாக பேசுகிறேன். எழுதவும் தெரியும், படிக்கவும் தெரியும்.

    ஆனால் அதை கற்றுக் கொள்வதற்காக மிகவும் சிரமப்பட்டேன். ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நுழைய வாய்ப்பு கிடைத்துவிட்டதில் மகிழ்ச்சிதான்.

    ஆனால் மொழி தெரியாதே! எப்படி நடிக்கப் போகிறோம்? என்ற தயக்கத்துடனேயே செட்டுக்குள் சென் றேன். அங்கிருந்த டெக்னீஷியன்கள் ஒருவருக்கொருவர் வாடா... போடா என்று பேசி சிரித்து கொண்டிருந்தார்கள். அதை கேட்டதும் தமிழில்  அது தான் நல்ல வார்த்தை   போலும் என்று நினைத்து மனதுக் குள் பதிவு செய்து கொண்டேன்.

    ஷூட்டிங் தொடங் கியது, முதல் நாள் முதல் காட்சி. பிரபு சாருடன்  நான் பேச வேண்டிய தமிழ் வசனத்தை  எனக்கு இந்தியில் லட்சுமி நாராயணன் என்ற தமிழ் பண்டிட் மொழி பெயர்த்து சொல்லித்தருவார். அவருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட பல மொழிகள் அத்துப் படி.

    அந்த படத்தின் முதல் கதாநாயகனான ரஜினி சாரும் செட்டுக்கு வருவார். அவர் மராத்தியில் என்னுடன் கலகலப்பாக பேசுவார்.
    அப்படித்தான் ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து ரஜினி சார் கிளம்பினார். ஒவ்வொருவரும் ‘பை... பை’ என்றார்கள். நானோ  ‘வாடா... போடா’ என்பதுதான் தமிழில் நல்ல வார்த்தை என்று மனதுக்குள்  நினைத்துக்கொண்டு அப்படியே ரஜினி சாரை பார்த்து ‘போடா’ என்று சொல்லி கை காட்டினேன். அதை கேட்டதும் செட்டில் இருந்த அனைவரும் நிசப்தமாகி விட்டார்கள். என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

    ஆனால் ரஜினி சாரிடம் எந்த ரியாக்ஷனும் தெரிய வில்லை.  சிரித்த படியே  அங்கிருந்து சென்றுவிட்டார். இதை கவனித்து கொண்டிருந்த லட்சுமி நாராயணன் பதட்டத்துடன் ஓடி வந்து ‘பெரிய வங்களைப் பார்த்து  அப்படி சொல்லக் கடாது’ என்றார். அதோடு ‘போடா’ என்ற தமிழ் வார்த்தைக்கு விளக்கமும் சொல்லித் தந்தார்.

    அதை கேட்டதும் , ‘அய்யய்யோ... தப்பு பண் ணிட்டோமே. என்ன நினைக்கப் போகிறாரோ’ என்று ஒரே பயம்.
    மறுநாள் ஷூட்டிங்கில் ரஜினி சாரை பார்த்ததும் தயக்கத்துடன் அருகில் சென்று, ‘சாரி சார். தெரியாமல் சொல்லி விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் சார்’ என்றேன்.

    அவர் வழக்கமான பாணியில் சிரித்தபடியே ‘நீ தெரியாமல்தான் பேசுகிறாய் என்பது எனக்கு தெரியும். நான் எதுவும் நினைக்க வில்லை. ஓகே. குஷ்’ என்று செல்லமாக தட்டிக் கொடுத்தார்.

    இதேபோல் தெலுங்கு பட ஷூட்டிங் சமயத்திலும் ஒரு சம்பவம் நடந்தது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனாவுடன் நான் நடித்துக் கொண்டிருந்தேன்.

    அப்போது நடன மாஸ்டரின் உதவியாளர் சதீஷ் என்பவர் தமிழில் ஒரு கெட்ட வார்த்தையை எனக்கு கற்றுத் தந்து அது குட்மார்னிங் என்று சொன்னார். நானும் அதை நம்பிவிட்டேன்.

    ஏ.வி.எம். ஸ்டூடியோவின் மாடியில் படப்பிடிப்பு தளத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது கீழே நாகார்ஜூனா வந்து கொண்டி ருந்தார். அவரை பார்த்ததும் நான் மேலே நின்று கொண்டே உரக்க கத்தி நாகார்ஜூனா சார்... என்று அவரை கூப்பிட்டு கெட்ட வார்த்தையை கூறினேன்.

    அன்றும் அப்படித்தான் ! அதை கேட்டு அரு கில் நின்றவர்கள் அதிர்ச்சியுடன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.
    அதற்குள் நாகார்ஜூனா என்னை பிடிக்க ஓடி வந்தார். நான் ஒவ்வொரு தளமாக ஓடினேன். முதல் தளத்துக்கு வந்த பிறகு எங்கும் செல்ல முடியவில்லை. அவர் பிடித்துக்கொண்டார். என் கையை பிடித்து திருகினார்.

    நானும் கோபத்தில், ‘‘என் மீது ஏன் கோபப்படு கிறீர்கள்? குட் மார்னிங் தானே சொன்னேன்’’ என்றேன்.
    அதை கேட்டதும், அவருக்கும் ‘ஷாக்’! இது குட்மார்னிங் என்று உனக்கு சொல்லித்தந்தது யார்? என்று கேட் டார். நான் சதீஷ் என்றதும் அந்த  வார்த்தையை சொல்லாதே அது கெட்ட வார்த்தை என்று சொன்னார்.

    அதை கேட்டதும் எனக்கும் அதிர்ச்சி. வேண்டு மென்று தான் சதீஷ் சொல்லி தந்து இருக்கிறார். என்று புரிந்து கொண்டு அவரைத் தேடினேன்.
    8&வது தளத்தில் ஒரு படத்துக்கு வேலை செய்து கொண்டு இருந் தார். அவரிடம் சென்று ஏன் இப்படி செய்தீர்கள்? நான் நாகார்ஜூனாவிடம் வாங்கிக் கட்டி அசிங்கப் பட்டுப் போனேன்’’ என்றேன்.

    ஆனால் சதீஷ் சிரித்தபடியே ‘இப்படி செய் தால்தான் நீ சீக்கிரம் தமிழ் கற்றுக் கொள்வாய் என்பதற்காகத்தான் அப்படி செய்தேன்’’ என்றார்.

    அதற்கு இப்படியா? என்று அவரை திட்டி தீர்த்துவிட்டு புறப்பட்டேன். அதன் பிறகு எனக்குள் தமிழில் பேசியே தீர வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது.

    கஷ்டங்கள் ...!  அவமானங்கள்...!
    இந்த இரண் டையும் வாழ்க் கையில் எவ்வளவு அனுபவிக் கிறோமோ அதை பொறுத்துதான் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற முடியும். எனது வாழ்க்கையில் பல விசயங்களில் அனுபவ பூர்வமாகவே இதை உணர்ந்து இருக்கிறேன். தமிழ் தெரியாததால் படப்பிடிப்பு தளங் களில் பலரது கேலி, கிண் டலுக்கு ஆளாகி இருக்கிறேன்.

    தத்தக்க...புத்தக்க... என்று நான் பேசிய தமிழை கேட்டு ஷெட்டில் பலர் கிண்டலடித்து கொண்டிருப்பார்கள். அவர்கள் என்னைத்தான் கிண்டல் செய்கிறார்கள் என்பது எனக்கும் புரியும். ஆனால் நான் அதை பெரிது படுத்துவது இல்லை. எப்படியாவது தமிழை கற்றே தீரவேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். அப்போது படப்பிடிப்பு தளங்களில் இருந்த பல டெக்னீசியன்கள் எனக்கு  ஊக்கம் அளித் தார்கள். மேடம், தமிழிலேயே எங்களிடம் பேசுங்கள். தவறாக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் சொல்லி தந்து திருத்துகிறோம் என்றார்கள். அதன்படியே சொல்லியும் தந்தார்கள். இப்படித்தான் நான் தமிழ் பேச தொடங்கினேன்.

    மிக விரை விலேயே தமிழில் எல் லோரி டமும் பேச தெரிந்து கொண்டேன். பேசுவது மட்டும் முக்கி யமல்ல. வாசிக்க தெரிந்தால் தான் டய லாக்கு களை உள் வாங்கி பேச முடியும் என் பதால் தமிழ் எழுத் துக் களை எப்படி தெரிந்து கொள்வது? என்று யோசித்து கொண் டிருந் தேன். அந்த நேரத்தில் எனது கார் டிரை வராக இருந்தவர் மூர்த்தி. அவர் தினமும் “தினத்தந்தி” நாளிதழ் வாங்கி வருவார். அதில் இருக்கும் எழுத் துக்களை ஒவ் வொன்றாக சொல்லி அதற் கான உச்சரிப்பு களையும் சொல்லித் தருவார்.

    நான் ஏற்கனவே தமிழ் பேச தெரிந்திருந்ததால் வார்த்தைகளையும் எழுத்துக்களையும்  சுபலமாக சேர்த்து படிக்க முடிந்தது. முக்கியமாக சிறு, குறு வார்த்தைகளாக இருந்ததால் படிக்க எளிதாக இருந்தது.

    அதிர்ஷ்டத்தை தேடி நான் பல வருஷங்கள் காத்திருந்தேன். ஆனால் இந்த ‘வருஷம்’ தான் அதிர்ஷ்ட ம் என்னை தேடி வந்தது.

    Next Story
    ×