search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரபு-குஷ்பு
    X
    பிரபு-குஷ்பு

    குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - வழியில் கண்டேன்... விழியில் விழந்தேன்...

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    சென்னை தியாகராய நகர்!
    ரங்கநாதன் தெருவும், உஸ்மான் ரோடும் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கூட்டத்தால் இப்போது எப்படி பரபரப்பாக காணப்படுகிறதோ அதே போல் சில பகுதிகள் சினிமா பிரபலங் களால் அந்த  நாட்களில் பரபரப்பாக காணப்படும்.

    அதில் ஒரு பகுதிதான் டாக்டர் நாயர் ரோடு. அங்குதான் தேவர் பிலிம்ஸ் அலுவலகம் இருந்தது.

    சாண்டோ சின்னப்பா தேவர் தமிழ்த்திரை உலகில் தனக்கென்று தனிமுத்திரை பதித்தவர். தொழில்நுட்பம் வளராத அந்த காலத்தில் விலங்குகளை கூட பழக்கப் படுத்தி சினிமாவில் நடிக்க வைத்து தமிழ் சினிமாவை பிரமிக்க வைத்தவர்.

    என்னை கவர்ந்த அவரது தனிச்சிறப்பு என்னவென்றால்  மொழி தெரியாமல் இருந்தும் இந்தி திரை உலகில் கால் பதித்து பிரபல இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா நடிப்பில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என்ற வெற்றிப்படத்தை நான் பிறப்பதற்கு முன்பே வழங்கியவர் என்பதை அறிந்து இருந்தேன்.

    ஆனால் மொழி தெரியாத எனக்கும் அவரது நிறுவனம் தான் தமிழ்திரை உலகில் எனக்கான இடத்தை காட்டப் போகிறது என்பதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை.

    தெலுங்கு, கன்னட படங்களில் கொடி கட்டி பறந்தாலும் தமிழ் படங்களில் எனக்கு வாய்ப்பு கிடைக்காத காலம்.

    ஒரு நாள் எனது மேக்-அப் மேனுடன் தேவர் பிலிம்ஸ் அலு வலகம் வழியாக  படப்பிடிப்புக்கு சென்று கொண் டிருந்தேன்.  அப் போது தனது காரை விட்டு இறங்கி நடிகர் பிரபு, தேவர் அலுவலகத்துக்கு சென்றார். அவரை பார்த்ததும் எனது மேக்-அப் மேனும் காரை விட்டு  இறங்கி ஓடி சென்று ‘ஹலோ’ சார் என்று அழைத்தார். நானும் ஹலோ சார் என்று நானும் வணக்கம் தெரிவித்தேன்.

    அப்போது தேவர் பிலிம்சின் துணை நிறுவன மான தண்டாயுதபாணி பிலிம்ஸ், ‘தர்மத்தின் தலைவன்’ என்ற படத்தை எடுக்க திட்டமிட்டு பணி யாற்றி இருக் கிறார்கள். அந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சுகாசினியை தேர்வு செய்து இருந்த தார்கள். ரஜினியின் தம்பியாக நடிக்கும் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் தேடிக் கொண்டு இருந்தார்கள்.

    நான் பிரபுவின் கண்களில் பட்டதும் நிச்சயம் இவள் நமக்கு ஏற்ற ஜோடியாக இருப் பாள். டைரக்டரும் விரும்பு வார் என்று நினைத்து இருக்கிறார்.

    அவராகவே என்னிடம் ‘எங்கள் படத்தில் நடிக் கிறீயாம்மா?’ என்று கேட்டார். மொழி தெரியா விட்டாலும் அவர் கேட்ட தோரணையை பார்த்து அப்படித்தான் கேட்டு இருப்பார் என்று யூகித்துக் கொண்டு ஓ.கே. சார் என்று தலையை ஆட்டினேன்.

    உடனே அவரும் டைரக்டர் எஸ்.பி. முத்துராமன்சாரிடம் விசயத்தை சொல்ல... அடுத்த கணமே  நானும் அவர் முன்பு ஆஜர் ஆனேன். அவருக்கும் என்னை பார்த்ததும் பிடித்து விட்டது. அப்புறம் என்ன...? பிரபுவுக்கு ஜோடியாக  ஒப்பந்தமானேன்.

    அப்போதுதான் முத்துராமன் சார், பிரபுவிடம் சொன்னாராம் ‘எல்லோரும் நல்லா பார்த்துக்கங்க இந்த பொண்ணு தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்க போவுது’ என்று.

    தான் சிபாரிசு செய்த பெண்ணை டைரக்டர் பாராட்டியதை கேட்டு பிரபு சாரும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார். பின்னர் ஒரு நாள் அவரே என்னிடம் இதை தெரிவித்தார். அதை கேட்டதும் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

    தமிழில் நான் கால் பதிக்க வேண்டுமென்றால், கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு சிறப்பாக நடிக்க வேண்டும். இதை வைத்துதான் நமது எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று எண்ணினேன்.

    மொழி தெரியாதது தான் அப்போது எனக்கு பிரச்சினையாக  இருந்தது. எனவே வசனங்களை நான் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு  ஒரு வரியாக சொல்லி தந்தார்கள்.

    வி.கே.ராமசாமி சார், வடிவுக்கரசி அம்மா தான் எனக்கு தைரியம் ஊட்டினார்கள். கதையை விளக்கி, உணர்வு களை அதற்கு ஏற் றார்போல் வெளிப்படுத்து. உன்னால் முடியும் என்று உற்சாகப் படுத்துவார்கள்.

    ஒரு டேக் முடிந் ததும் ஓடி சென்று வடிவுக்கரசி அம்மா விடம் எப்படி இருந் ததும்மா என் பேன். ‘சூப்பர்டா’ என்று பாராட்டு வார்கள். இப்படித் தான் ‘தர்மத் தின் தலைவன்’ படத்தில் எனது பாத் திரத்தில் ஒவ் வொரு காட்சி யையும் நடித்து முடித்தேன்.

    படம் வெளி யான போது பதட்டமாக இருந்தது. நான் அறிமுகமான முதல் படம் எப்ப டியாவது வெற்றி பெற வேண் டும் என்று கட வுளிடம் வேண்டினேன்.

    படம் வெற்றிப் பட மாகவே அமைந்தது. படத்தில் இடம் பெற்ற ‘தென்மதுரை வைகை நதி’ உள்பட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. தமிழகத்தின் பட்டிதொட்டி எல்லாம் பாடல்கள் ஒலித்தது.

    ‘வெள்ளி மணி கிண்ணத்தில் சந்தனம் தான்’ என்ற பாடலுக்கு பிரபுவும் நானும் சேர்ந்து ஆடுவோம். அந்த படத் தில் அறிமுகமான என்னை தமிழ் ரசிகர் கள்  கொண்டாட தொடங்கினார்கள். அவர்கள் இதயத்தில் எனக்கும் ஒரு இடத்தை தந்தார்கள். அவர்கள் அன்று வழங்கிய இடம் தான் இன்று என்னை இவ்வளவு உயரத்தில் கொண்டு வைத்துள்ளது.

    அதன் பிறகும் வாய்ப்புக் காக ஒரு வருடம் காத்து இருந்தேன். காத்து இருந்ததும் வீணாகவில்லை.  கைமேல் பலனும் கிடைத்தது.

    நல்லா  இருக்கிறாள் பாருங்கள்...
    கதாநாயகிகளை எல்லோரும் தேடுவார்கள். தேர்வு செய்வார்கள். இது சினிமாவில் நடப்பதுதான்.

    ஆனால் வழியில் பார்த்ததும் கதாநாயகிக்கு தகுதியானவள் என்று கருதினாலும், ‘டைரக்டரை போய் பாரும்மா’ என்று சொல்லி இருக்கலாம். எல்லோரும் அப்படித்தான் செய்வார்கள்.

    ஆனால் பிரபு சார் அதில் இருந்து மாறுபட்டவர். கலைத்துறையில் முன்னுக்கு வரப்போராடும் சக கலைஞரை கை தூக்கிவிடவேண்டும் என்று நினைப்பவர். டைரக்டரிடம் அவரே நேரில் சென்று, ‘‘இந்த பெண் நல்லா இருக்கிறாள், பாருங்கள்’’ என்று தைரியமாக சொன்னார். நான் நல்லா இருக்கிறேனா? இல்லையா? கதாநாயகிக்கான தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பதை டைரக்டர்தான் பார்த்து முடிவு செய்வார். ஆனால் அந்த உரிமையை பிரபுவே கையில் எடுத்து எனது முன்னேற்றத்துக்காக கை கொடுத்ததை என்னால் மறக்க முடியாது.

    Next Story
    ×