search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனாவை தடுக்கும் யோக சிகிச்சை
    X
    மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனாவை தடுக்கும் யோக சிகிச்சை

    ஆரோக்கியம் நம் கையில் - மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனாவை தடுக்கும் யோக சிகிச்சை

    யோகாசனம் செய்தால் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் சரியாக அதனதன் விகிதத்தில் சுரக்கும். எல்லா உடல் உள்உறுப்புக்கள் அனைத்தும் சரியாக இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
    இப்பொழுது தான் 10, 11, 12 ம் வகுப்பு மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் பள்ளிக்கு, கல்லூரிக்கு நேரடியாக செல்கின்றனர்.  அடுத்து, நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்க அரசு திட்டமிடப்பட்டிருப்பதையும் நாம் அறிவோம்.  இந்த நேரத்தில் ஒவ்வொரு பள்ளிக் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் தேவை உடலில் நோய் எதிர்ப்பாற்றல்,  மனதில் தைரியம், தன்னம்பிக்கை, நேர்முகமான எண்ணங்கள், இவை அனைத்தையும் தரும் மருந்து நிம்மிடமே உள்ளது.  ஆம், அதுவே யோகக்கலையாகும்.

    யோகாசனம்

    யோகாசனம் என்பது வெறும் உடற்பயிற்சி என்று எண்ணாதீர்கள்.  இது மனிதனின் உடலில் மறைந்து இருக்கும் ஆத்ம சக்தியை வெளிக்கொணரும் பயிற்சி. நமது உடல், மனம் தனக்குள் இருக்கும் ஆன்மாவுடன் இணைக்கும் பயிற்சியாகும்.  நமது எண்ணம், உணர்ச்சி, செயல், இவை மூன்றையும் சரி செய்வது யோகக்கலை. யோகாசனம் செய்தால், எண்ணம் உதயமாகும் பொழுதே புத்தி பூர்வமாக சிந்தித்து தீய எண்ணம் என்றால் உடனே அது விருத்தியாகாமல் தடுத்து நிறுத்தி விடும். நல்ல எண்ணங்கள் மட்டுமே மலர்ந்து அது சொற்களாகவும், செயல்களாகவும் மாறும். யோகாசனம் செய்தால் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் சரியாக அதனதன் விகிதத்தில் சுரக்கும். எல்லா உடல் உள்உறுப்புக்கள் அனைத்தும் சரியாக இயங்கும்.  நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.  

    பள்ளி மாணவ, மாணவியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய யோகப் பயிற்சிகளை தினமும் காலை, மாலை அரை மணி நேரம் செய்யுங்கள். நீங்கள் பள்ளி சென்றால் நோய் எதிர்பாற்றலுடன் எந்த ஒரு தொற்றுக் கிருமியும் தாக்காமல் சிறப்பாக, நலமாக வாழலாம். இதை படிக்கின்ற பெற்றோர்கள், ஆசிரியப் பெருமக்களும் நீங்களும் முடிந்த யோகப் பயிற்சிகளை தினமும் பயிலுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் பயிற்றுவியுங்கள். யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி, தியானம் தான் உண்மையான நோய் எதிர்ப்பாற்றல் தரும் மருந்தாகும்.

    மாணவச் செல்வங்களுக்கு கொரோனா வராமல் பாதுகாக்கும் யோகா

    பத்மாசனம்:

    தரையில் ஒரு விரிப்பு விரித்து இரண்டு கால்களையும் நீட்டவும்.  வலது காலை மடித்து பாதத்தை இடது தொடை மீது வயிற்றை ஒட்டியவாறு வைக்கவும். இடது காலை மடித்து பாதத்தை வலது தொடை மீது வயிற்றை ஒட்டியவாறு வைக்கவும்.
    முதுகுத்தண்டை நிமிர்த்தி உட்காரவும்.  கைகளை சின் முத்திரையில் வைக்கவும்.  ஆள்காட்டி விரல், கட்டை விரல் நுனியை தொட்டு, மற்ற மூன்று விரல்கள் படத்தில் உள்ளது போல் தரையை நோக்கி இருக்கட்டும்.

    கண்களை மூடி மெதுவாக மூச்சை இரு நாசி வழியாக இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.  பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கூர்ந்து கவனிக்கவும்.  ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.  பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு  வரவும்.

    பலன்கள்:

    நரம்பு மண்டலம் நன்கு சக்திப் பெற்று இயங்கும்.
    மன அமைதி கிடைக்கும்.
    தன்னம்பிக்கை கிடைக்கும்.
    தெளிந்த சிந்தனையுடன் செயல்படலாம்.
    இரத்த அழுத்தம் வராமல் பாதுகாக்கும்.
    வாதம், பித்தம், சிலேத்துமம் மூன்றும் உடலில் சமசீர் அளவில் இயங்க வழிவகை செய்கின்றது.
    மூளை செல்களுக்கு இரத்த ஓட்டம் நன்கு இயங்கும்.  முதுகெலும்பு இந்த ஆசனத்தில் நேராக இருப்பதால் அதைச் சார்ந்த உள் உறுப்பு, சிறுநீரகம், சிறுகுடல், பெருங்குடல், நுரையீரல், இதயம் நன்கு சக்தி பெற்று இயங்குகின்றது.
    ஞாபக  சக்தி அதிகரிக்கும்.
    உடலில் உள்ள கொழுப்பு கட்டிகளை கரைக்கின்றது.

    வஜ்ராசனம் செய்முறை: இந்திரனின் ஆயுதத்தின் பெயர் “வஜ்ஜிராயுதம்” அது போல எதையும் தாங்கும் இதய வலிமையை இந்த ஆசனம் தருவதால் இந்த பெயர்.

    விரிப்பின் மீது கால்களை நீட்டி அமரவும்.  வலது காலை மடக்கி குதிகாலை வலது புட்டத்தின் அடியில் வைக்கவும்.  இடது காலை இடது புட்டத்திற்கு அடியில் வைத்து கால் முட்டிகளை ஒன்று சேர்க்கவும்.  படத்தைப் பார்க்கவும்.  உள்ளங்கைகளை முட்டியின் மீது வைத்து கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும்.  இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.  பின் சாதாரண நிலைக்கு வரவும்.

    பலன்கள்:

    அஜீரணம் நீங்கும்.
    இருதய படபடப்பை சரி செய்கின்றது.
    மூட்டு வலி, பாத வலி வராது, இடுப்புவலி வராது.
    வாதம் வராது.
    கிட்னி நன்கு இயங்கும்.
    உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.
    நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.  
    திடமான நல்ல சிந்தனை எப்பொழுதும் வளரும்.
    இரத்த அழுத்தம் வராது.  
    இதயம், நுரையீரல் நல்ல சக்தி பெற்று இயங்கும்.
    மாணவர்களுக்கு எந்த ஒரு வைரஸ் கிருமியும் தாக்காமல் வளமாக வாழலாம்.

    பச்சிமோஸ்தாசனம்:  

    இந்த ஆசனத்தை மிருத்யுஞ்சய ஆசனம் அதாவது எமனை வெல்லும் ஆசனம் என்று அழைப்பர்.
    விரிப்பில் கால்களை நீட்டி கிழக்கு திசை நோக்கி அமரவும்.  இரு கைகளையும் தலைக்குமேல் காதோடு உயர்த்தி மூச்சை வெளிவிட்டுக் கொண்டே குனிந்து முதலில் கால் பெருவிரல்களை தொடவும்.  பின் படிப்படியாக குனிந்து நெற்றியை இரு கால் முட்டிகளின் மீது வைத்து கைகளை மடித்து கை முட்டியை விரிப்பின் மீது வைக்கவும். சாதாரண மூச்சில் 20  நொடிகள் இருக்கவும்.  பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும்.  இரண்டு முறைகள் செய்யவும். முதலில் கால் பெருவிரலை கைகளால் தொட முயற்சிக்கவும்.  தொடர்ந்து பயிற்சி செய்யும் பொழுது நான்கு மாதத்தில் முழுமை நிலை வரும்.

    பலன்கள்:

    சிறுநீரகம் மிகச் சிறப்பாக இயங்கும்.
    மனித உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.
    நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
    தலைவலி வராமல் பாதுகாக்கும்.
    வாதம் சரியாகும்.
    பசியின்மை, நீரிழிவு, அஜீரணம், மலச்சிக்கல், கல்லீரல் அயர்ச்சி, மண்ணீரல் வீக்கம் முதலியவற்றை சரி செய்கின்றது.
    இடுப்பு வலி, மூல வியாதி வராமல் தடுக்கும்.
    நரம்பு மண்டலங்கள் நன்றாக இயங்கும்.
    நுரையீரல் பலவீனத்தால் ஏற்படும் மூச்சு சம்பந்தமான நோய்கள்     நீங்கும்.  நுரையீரல் சக்தி பெற்று இயங்கும்.  அதனால் எந்த ஒரு தொற்றுக்கிருமியும் மாணவச் செல்வங்களையும், இந்த ஆசனம் செய்யும் அனைவரையும் தாக்காது.

    நோய் எதிர்ப்பாற்றல் தரும் ஆதி முத்திரை விரிப்பில் கிழக்கு திசை நோக்கி சுகாசனம் அல்லது பத்மாசனத்தில் அமரவும்.  முதுகெலும்பு  நேராகயிருக்கட்டும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும் இருபது விநாடிகள்.  பின் கட்டை விரலை மடக்கி உள்ளங்கை நடுவில் வைத்து மற்ற நான்கு விரல்களை மூடவும்.  படத்தை பார்க்கவும். எல்லா விரல்களிலும் சிறிய அழுத்தம் கொடுக்கவும்.  கண்களை மூடி ஐந்து முறை மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  பின் சாதாரண மூச்சில் இருக்கவும்.  இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.  பின் சாதாரண நிலைக்கு வரவும்.

    பலன்கள்:

    உடலில் உயிரோட்டம் நன்றாக இயங்கும்.  
    நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.  
    இரத்த ஓட்டம், மூச்சோட்டம், வெப்ப ஓட்டம் சமமாக இருக்கும்.  
    இரத்த அழுத்தம் வராமல் பாதுகாக்கும்.  
    சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கலாம்.  
    தன்னம்பிக்கையுடன் வாழலாம்.  
    சிந்தனை தெளிவு, புத்தி கூர்மை உண்டாகும்.  

    உடல் முழுக்க உயிர் ஆற்றல் ஒவ்வொரு செல்களிலும் கிடைப்பதால் நோய் எதிர்ப்பு திறன் முழுமையாக பெறலாம்.
    எளிய நாடி சுத்தி

    விரிப்பில் சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும்,  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  இடது கை சின் முத்திரையில் வைக்கவும்.  வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடி இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  மீண்டும் இடதில் இழுத்து இடதில் வெளிவிடவும்.  இதே போல் பத்து முறைகள் செய்யவும்.

    பின் மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து வலது நாசியிலேயே மூச்சை வெளிவிடவும்.  இதே போல் பத்து முறைகள் செய்யவும்.

    பின் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  இதே போல் பத்து முறைகள் செய்யவும்.  இந்த நாடிசுத்தி நுரையீரலில் உள்ள அசுத்த காற்றுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.  நல்ல பிராண காற்றை மீண்டும் நுரையீரல் உள் வாங்கும்.  நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.

    மாணவர்கள் பள்ளி செல்லும்பொழுது முக கவசம் அணிய வேண்டியுள்ளது.  அதனால் நுரையீரலின் இயக்கம் சற்று பாதிக்கப்படும்.  எனவே மாணவர்கள், ஆசிரியர்கள் வீட்டிற்கு வந்தவுடன், முகக்கவசத்தை எடுத்துவிட்டு, குளித்துவிட்டு இந்த மூச்சுப் பயிற்சியை பத்து நிமிடங்கள் செய்தால் நுரையீரலில் உள்ள காற்று முடிச்சுகளில் உள்ள அசுத்தக் காற்று வெளியேறும்.  மீண்டும் நுரையீரல் சுத்தமான பிராண காற்றை உள் வாங்கி உடல், மன இயக்கத்தை சரி செய்யும்.

    ஒவ்வொரு பெற்றோரும், உங்கள் குழந்தைகளுக்கு மேலே குறிப்பிட்ட யோகக் கலைகளை தினமும் பயில செய்யுங்கள்,  நவம்பர் மாதம் பள்ளி செல்லும் பொழுது உங்கள் குழந்தை நோய் எதிர்பாற்றலுடன் செல்வார்கள்.  எந்த வைரஸ்சும் தாக்காது.

    நமது இந்திய நாட்டில் உருவான யோகக்கலை நம்மிடம் இருக்கும் பொழுது நாம் ஏன் பயப்பட வேண்டும்.  அரசும் இக்கலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு இல்லங்களாக கொரோனா வராமல் தடுக்கும் அற்புத மருந்து யோகா, முத்திரை, மூச்சு பயிற்சி என்பதை விளக்கி பயில செய்ய வேண்டும்.


    Next Story
    ×