search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஷ்பு
    X
    குஷ்பு

    குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - போட்ட சபதத்தை நிறைவேற்றினேன்

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள். அதேபோல் என் அப்பாவும் நிச்சயம் ஒரு நாள் திருந்துவார்,  எங்களிடம் பாசமாக இருப்பார் என்று சின்ன வயதில் நினைத்தது உண்டு.

    ஆனால் காலம் மாறியது. அவர் மட்டும் கொஞ்சமும் மாறவில்லை. அதற்கு மாறாக அவரது போக்கில் மாற்றம் தெரிந்தது. அந்த மாற்றத்துக்கான காரணம் பிற்காலத்தில் தான் எங்களுக்கு தெரியவந்தது.

    நான் படங்களில் நடித்து ஓரளவு பெயர் வாங்க தொடங்கியதும் ஓரளவு பண வசதியும் வந்தது. கலைத்துறையில் நான் சம்பாதிக்கத் தொடங்கியதும் அவரும் தனது கடை வியாபாரத்தை கைவிட்டார்.

    முழுக்க முழுக்க எனக்கு உதவியாக இருந்து கால்சீட் விவகாரங்கள், வரவு-செலவுகளை கவனிப்பது ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார்.

    எனக்கும் அப்பா இருப்பது தைரியமாகத் தோன்றியது. அவர் மீது அதீத நம்பிக்கை வைத்தேன். ஆனால் அவரோ என் மீது நம்பிக்கையை விட நான் வாங்கும் பணத்தின் மீது தான் நம்பிக்கையும், ஆர்வமும் வைத்து இருந்தார்.

    படம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. பணம் எவ்வளவு கிடைக்கும் என்பதில் மட்டுமே அவர் ஆர்வம் காட்டினார். அதை அடிப்படையாக வைத்தே என்னையும், எனக்கு விருப்பம் இல்லாத படங்களிலும் நடிக்க வற்புறுத்தினார்.

    சிறிய வயதாக இருந்தாலும் கலைத்துறை யில் எவ்வாறு நடிப்பது, நடந்துகொள்வது என்பதை பொறுத்துதான் நீடித்து நிற்க முடியும் என்பதை ஓரளவு அறிந்துகொண்டேன். அதனால் புகழ்பெற்ற நிறுவனங்கள், பெயர் பெற்ற தயாரிப்பாளர்கள், முன்னணி கதா நாயகர்கள், நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

    ஆனால் என் தந்தையோ, எனது இந்த எண்ணத்துக்கு நேர்மாறாக இருந்தார். பணத்தை மட்டும் பார். நடித்து சம்பாதிப்பது ஒரு குறுகிய காலம் தான். அதற்குள் எவ் வளவு முடியுமோ, அவ்வளவு சம்பாதித்து விட வேண்டும் என்பார்.

    அதை நான் ஏற்றுக் கொள் ளாததால் அடிக்கடி எங்களுக் குள் தகராறு ஏற்பட்டது. அப்போதுதான் நான் கடந்த அத்தியாயத்தில் குறிப் பிட்ட கார் உடைப்பு, நகையை எடுத் துச் சென்ற சம்பவங்கள் நடந்தன.

    இதுதொடர்பாக அவருடன் கடுமையான சண்டை வந்தது. அந்த நேரத்தில் அம்மாவும், 3 அண்ணன்களும் என் பக்கத் தில் நின்றார்கள்.

    நான் கூட அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ஒத்துவராது எனவே அம்மா நம் பக்கம் நிற்பார். அண்ணன்கள் அப்பா பக்கம் தான் போவார்கள் என்று நினைத்தேன். ஆனால் எனது தரப்பில் இருந்த நியாயத்தையும், என் மீது அண்ணன்கள் வைத்திருந்த பாசத் தையும், நம்பிக்கையையும் நினைத்து மெய்சிலிர்த்துப்போனேன்.

    நான் கஷ்டப்பட்ட அந்த நேரத்தில் எனக்கு அம்மா ஆறுதலாகவும், அண்ணன்கள் மிகப் பெரிய பலமாகவும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள்.

    தங்கச்சி சினிமா துறையில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று அவர்களும் மனப்பூர்வமாக நினைத்தவர்கள். அதனால் தான் அவர்கள் என் பக்கம் நின்றார்கள்.   

    அப்பா மட்டும் தனி ஆளாக நின்றார். அப்போது அவர் நான் இல்லாமல் உன்னால் சினிமா துறையில் ஜெயிக்க முடியாது. நாய் போல் நிச்சயம் ஒரு நாள் என் காலடிக்கு வருவாய் என்றார்.

    அப்போது நான் சொன்னேன்... ‘என் உயிர் இருக் கும் வரை அப்படி ஒரு சூழ்நிலை வராது. நீங்கள் செத்தால் கூட நான் வரப் போவ தில்லை. நமக்குள்ளான தந்தை&மகள் உறவு முறிந்துவிட்டது’ என்று சபதம் போட்டேன்.

    அந்த அளவுக்கு நான் கோபத்தின் உச்சிக்கு சென்றதற்கும், அவரை வெறுப் பதற்கும் இன்னொரு காரணமும் இருந்தது.

    அவர் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதாக கேள்விப்பட்டேன். அதனால் தான் அவர் எங்கள் குடும்பத்தின் மீது அதிக வெறுப்பு காட்டியதும், பணத்தை தேவை இல்லாமல் செலவழித்ததும் என்பதை தெரிந்து கொண்டேன்.

    அப்படிப்பட்ட ஒரு மனிதர் எங்களோடு இருப்பதால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. மாறாக வேதனை தான் அதிகரிக்கும் என்பதால் எனக்குள் அப்படி ஒரு ஆவேசம் வந்தது.

    நான் அன்று போட்ட சபதம் இன்று வரை அப்படியே தான் உள்ளது. 1986-ம் ஆண்டு அப்பா எங்களை விட்டு பிரிந்து சென்றார். 2001-ல் அவர் தவறிவிட்டதாக தகவல் கேள்விப்பட்டேன்.  ஆனால் நாங்கள் யாரும் போக வில்லை.

    எங்கள் மத சம்பிரதாயப்படி பெற்றோர் இறந்துபோனால் அடக்கம் செய்யும் போது பிள்ளைகள் ஒரு பிடி மண் அள்ளி போட வேண்டும். அதை கூட இழந்து   போன தால் அவர்தான் தோற்றுப் போனார். நான் என் சபதத்தில் வெற்றிதான் அடைந்தேன்.

    இருந்தாலும் ஒரு தந்தை எப்படி எல்லாம் நடக்கக் கூடாதோ அப்படி நடந்ததால் குடும்பம், குழந்தைகள் என்று எல்லோராலும் வெறுக்கும் சூழ்நிலைக்கு சென்றார். எந்த தந்தையும் ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்ற பேதமும் பார்க்கக்கூடாது.

    குழந்தைகளுக்கு நல்ல விசயங்களையும், நல்ல எதிர்காலத்தையும் சொல்லித்தர வேண்டும். அதுதான் நல்ல தந்தைக்கு அழகு.
    அப்படிப்பட்ட தந்தையின் சொல் தான் வேத மந்திரமாக  பிள்ளைகளால் பின் பற்றப்படும். இதை என் வாழ்க்கையில் நான் அனுபவித்து விட்டேன்.

    குழந்தை நட்சத்திரமாக இந்தி திரை உலகில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் படப்பிடிப்பு தளத்தில் அங்கும், இங்கும் ஓடிக்கொண்டிருப்பேன். அப்போது செட்டில் இருக்கும் அமிதாப்பச்சன் சார் என்னை மடியில் தூக்கி வைத்து கொஞ்சி இருக்கிறார்.

    அதேபோல் ஜிதேந்திரா சார் மடியில் இருந்தபோது அப்படியே தூங்கியும் இருக்கிறேன். அப்போது இந்தி மெகா ஸ்டார்களுக்கு நான் செல்லப்பிள்ளை. குழந்தை நட்சத்திரத்தில் இருந்து வளர்ந்து முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தேன். கோவிந்தாவின் முதல் படத்தில் அவருடன் நடித்தேன். அப்போது இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். அவரது படப்பிடிப்பு தளத்தில்தான் எனது 14-வது பிறந்தநாளை கொண்டாடினேன்.

    எனக்கு சூட்டிங் நடக்கும்போது அவர் வந்துவிடுவார். அதேபோல் அவருக்கு சூட்டிங் நடக்கும் இடத்திற்கு நான் சென்றுவிடுவேன். நடன ஒத்திகைகளுக்கு இருவரும் சேர்ந்தே செல்வோம். அந்த அளவுக்கு நாங்கள் நண்பர்கள். அவரை வாடா... போடா... என்று தான் அழைப்பேன். கூட்டங்களில் வைத்தும் அப்படியே கூப்பிடும்போது மானத்தை வாங்காதே என்று என்னிடம் செல்லமாக கோபித்துக் கொள்வார். கோவிந்தாவின் அம்மா அவரை விட என்னிடம் பாசமாக இருப்பார். கோவிந்தாவுக்கு திருமணம் முடிந்த பிறகு அவரது மனைவி எங்கள் நட்பின் ஆழத்தை புரிந்து கொண்டு, “இவனை நீயாவது கட்டித் தொலைச்சிருக்கலாம். நான் கட்டிக்கிட்டு படாதபாடு படுகிறேன்” என்பார். அதை கேட்டு எல்லோரும் சிரிப்போம்.

    எனக்கு 2-வது குழந்தை பிறந்தபோது மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து பார்த்துவிட்டு சென்றார். இப்போதும் மும்பைக்கு சென்றால் அவரை பார்க்காமல் திரும்ப மாட்டேன். அதேபோல் சென்னைக்கு வந்தால் என்னை பார்க்காமல் அவரும் திரும்ப மாட்டார். அந்த அளவுக்கு எங்கள் நட்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
    Next Story
    ×