search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • ஏக்நாத் ஷிண்டே கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
    • மயங்கிய நிலையில் கட்கரியை மற்ற தலைவர்கள் தாங்கியபடி அழைத்துச் சென்றனர்.

    பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் நிதின் கட்கரி. இவர் மத்திய அமைச்சராகவும் இருந்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இவர் மகாராஷ்டிரா மாநிலம் யவாத்மல் என்ற இடத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி வேட்பாளருர் ராஜஸ்ரீ பாட்டிலுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தது. பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென மயங்கினார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தலைவர்கள் அவரை தூக்கிக்கொண்டு சென்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியேனதால் தலைவர்களும், தொண்டர்கள் நிதின் கட்கரிக்கு என்ன ஆனதோ, என கவலை அடைந்தனர்.

    ஆனால், மயக்க நிலைக்கு சென்ற நிதின் கட்கரி முறையாக சிகிச்சை பெற்று, பின்னர் மேடைக்கு வந்து தனது பேச்சை தொடர்ந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் மயங்கிய நிலைக்கு சென்ற வீடியோ எக்ஸ் பக்கத்தில் பரவத் தொடங்கியுள்ளது.

    நிதின் கட்கரி 2014 மற்றும் 2019-ல் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

    • நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல் என கூறி, எனது விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது
    • ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை

    ஏ.பி.சி. எனப்படும் ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்தை சேர்ந்த செய்தியாளர் அவனி தியாஸ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அந்நிறுவனத்துக்காக டெல்லியில் பணியாற்றி வருகிறார்.

    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றை அவனி தியாஸ் சமீபத்தில் வெளியிட்டார்.

    ஏ.பி.சி., நிறுவனத்தின் யுடியூப் சேனலில் வெளியான நிஜ்ஜார் கொலை குறித்த இந்த வீடியோ இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

    இந்நிலையில் இதை எல்லை மீறிய செயல் என கூறி, எனது விசாவை வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது என்று அவனி தியாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவனி தியாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கடந்த வாரம் நான் திடீரென இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல் என கூறி, விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்தி சேகரிக்கும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

    இதனால், ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை. பின், ஆஸ்திரேலிய அரசு தலையிட்டதன் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு விசா நீட்டிக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

    ஆனால், "ஆஸ்திரேலியாவில் அவருக்கு வேறொரு வேலை கிடைத்தது. அதற்காக தான் அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். விசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் அவர் வெளியேறவில்லை, தனிப்பட்ட காரணங்களுக்காக தான் அவர் வெளியேறினார்" என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • கோபமடைந்த சாபி, கணவருக்கு பாடம் கற்பிக்க தனது சகோதரர்களை அழைத்ததாக கூறப்படுகிறது.
    • சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவருக்கு திருமணமாகி சாபி என்ற மனைவி உள்ளார். மிஸ்ராவின் தங்கை திருமணம் வருகிற 26-ந்தேதி நடைபெற இருந்தது. இதையடுத்து தங்கையின் திருமணத்திற்கு தங்க மோதிரம் மற்றும் டி.வி., ஒன்றை பரிசாக வாங்கி கொடுக்க சந்திர பிரகாஷ் முடிவு செய்தார். இதனை அறிந்த அவரது மனைவி கோபமடைந்தார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது.

    இதனால் கோபமடைந்த சாபி, கணவருக்கு பாடம் கற்பிக்க தனது சகோதரர்களை அழைத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் வந்து நடத்திய பேச்சுவார்த்தை முற்றி தகராறாக மாறியுள்ளது. இதில் சந்திர பிரகாஷை சாபியின் சகோதரர்கள் சுமார் 1 மணிநேரமாக தாக்கியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திர பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக சந்திர பிரகாஷின் மனைவி சாபி உள்பட 5 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.
    • அரவிந்த் கெஜ்ரிவாலை திகாரில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பதிவியில் இருந்து விலகாத நிலையில், சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், டெல்லி கேபினட் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது, "மக்கள் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் சந்தித்ததாகவும், அவருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் நான் அரை மணி நேரம் சந்தித்தேன். அப்போது, "மக்கள் தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று அவர் கூறினார். "அவர் வலிமையானவர்" என்றும் "டெல்லி மக்களின் ஆசீர்வாதத்துடன் தனது போராட்டத்தை தொடருவேன்" என்றும் அவர் கூறினார். 

    • பன்ஸ்வாரா மக்களவைத் தொகுதியில், அரவிந்த் தாமோர் என்பவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியது.
    • காங்கிரஸ், பாஜக இடையே காணப்பட்ட போட்டி தாமோர் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டியாக மாறியது.

    பன்ஸ்வாரா:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் முதல்கட்டமாக 12 தொகுதிகளுக்கு கடந்த 19-ந்தேதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி 13 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பன்ஸ்வாரா மக்களவைத் தொகுதியில் தனது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இத்தொகுதியில், அரவிந்த் தாமோர் என்பவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியது. இருந்தபோதிலும் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி தேதிக்கு ஒரு நாள் முன்னதாக காங்கிரஸ், பாரத் ஆதிவாசி கட்சி வேட்பாளரான ராஜ்குமார் ரோட்டை ஆதரிப்பதாக தெரிவித்தது. இதையடுத்து அரவிந்த் தாமோர் வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இதையடுத்து காங்கிரஸ், பாஜக இடையே காணப்பட்ட போட்டி தாமோர் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டியாக மாறியது.

    இதனால் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட அரவிந்த் தாமோருக்கு வாக்களிக்க வேண்டாம் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 14 தொகுதிகளில் உள்ள 30,602 வாக்குச்சாவடிகளில் 1.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.
    • 50,000 போலீசார், 65 கம்பெனி துணை ராணுவ படை மற்றும் பிற மாநிலங்களின் மாநில ஆயுதப்படை போலீசார் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த 19-ந்தேதி தமிழகம், புதுவை உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், கர்நாடகாவில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.

    மேலும் பெங்களூரு ஊரக மற்றும் மைசூர் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளின் நிகழ்வுகள் இணையதளத்தில் ஒளிபரப்பப்படும். முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 14 தொகுதிகளில் உள்ள 30,602 வாக்குச்சாவடிகளில் 1.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். 50,000 போலீசார், 65 கம்பெனி துணை ராணுவ படை மற்றும் பிற மாநிலங்களின் மாநில ஆயுதப்படை போலீசார் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என கூறினார்.

    முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள உடுப்பி-சிக்மகளூர், ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூர், சாமராஜநகர், பெங்களூர் ரூரல், பெங்களூர் வடக்கு, பெங்களூர் மத்திய, பெங்களூரு தெற்கு, சிக்பல்லாபூர் மற்றும் கோலார் ஆகிய 14 தொகுதிகளில் 2,88,19,342 வாக்காளர்கள் உள்ளனர். 1,44,28,099 பேர் ஆண்கள், 1,43,88,176 பேர் பெண்கள் மற்றும் 3,067 மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

    • திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • உடல்நிலை பாதிக்கப்பட்ட சுமார் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    உத்தரபிரதேசம்:

    உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

    இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட சுமார் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விலைவாசி உயர்வு, மக்களை பாதிக்கும் பிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதமர் தவறிவிட்டார்.
    • அதற்குப் பதிலாக பொருத்தமற்ற விசயத்தில் கவனம் செலுத்துகிறார். பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு நாளை மறுதினம் (ஏப்ரல் 26-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இன்று மாலை ஆறு மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய இருப்பதால் நட்சத்திர தலைவர்கள் கேரளாவை முற்றுகையிட்டு இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி இன்று கேரளாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    பிரதமர் மோடி மக்களுக்காக ஏதும் செய்யவில்லை. உண்மையான பிரச்சனையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். விலைவாசி உயர்வு, மக்களை பாதிக்கும் பிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதமர் தவறிவிட்டார். அதற்குப் பதிலாக பொருத்தமற்ற விசயத்தில் கவனம் செலுத்துகிறார். பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இந்த மக்களவை தேர்தல் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அரசமைப்பை பாதுகாப்பதற்கான வாய்ப்பு. முன்னேற்றம் குறித்து அவர்கள் பேசமாட்டார்கள். உண்மையான பிரச்சனை குறித்து அவர்கள் பேசமாட்டார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 10 ஆண்டுகளாக கடுமையாக அதிகரித்தது. அதேபோல் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு பிரயங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.
    • இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்

    பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு தள்ளுபடி செய்த ₹16 லட்சம் கோடியில் என்னென்ன செய்திருக்கலாம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். அதில்,

    "இந்த ₹16 லட்சம் கோடி பணத்தை வைத்து,

    16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.

    16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் உதவித்தொகை வழங்கியிருக்கலாம்.

    இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்.

    10 கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு கடன் தள்ளுபடி செய்து பல தற்கொலைகளை தடுத்திருக்கலாம்.

    20 ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டுக்கும் ₹400-க்கு கேஸ் சிலிண்டர்கள் கொடுத்திருக்கலாம்.

    பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கியிருக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இவிஎம் , விவிபாட் இயந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர் உள்ளன.
    • அனைத்து மைக்ரோ கண்ட்ரோலர்களும் ஒரு முறை நிரல்படுத்தக் கூடியவை.

    விவிபாட் வழக்கு, சந்தேகங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும் எண்ணக் கோரிய வழக்கில்,  உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இவிஎம் , விவிபாட் இயந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர் உள்ளன.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பேலட் இயந்திரம், இவிஎம், விவிபாட் ஆகிய மூன்றும் சீல் வைக்கப்படும். 45 நாட்கள் இந்த தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.

    தேர்தல் வழக்கு தொடரப்பட்டால் சம்மந்தப்பட்ட இயந்திரம் மட்டும் தனியாக பாதுகாத்து வைக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    மேலும், கண்ட்ரோல் யூனிட், பாலட் யூனிட் மற்றும் விவிபாட் ஆகிய மூன்றும் அவற்றின் சொந்த மைக்ரோ கண்ட்ரோலரைக் கொண்டுள்ளன.

    இவற்றை தாமாக அணுக முடியாது. அனைத்து மைக்ரோ கண்ட்ரோலர்களும் ஒரு முறை நிரல்படுத்தக் கூடியவை. அவற்றை மாற்ற முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தரப்பில் வாதாடுகையில், " மைக்ரோ கண்ட்ரோல் யூனிட் பிளாஷ் மெமரியை கொண்டுள்ளதால் மீண்டும் புரோகிராம் எழுத முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது.

    விவிபாடில் பிளாஷ் மெமரி இருக்கும்போது முறைகேடு செய்வதற்கான புரோகிராம் இருக்க முடியும். " என்றார்.

    அப்போது, "தேர்தல் ஆணையத்தை நம்ப வேண்டும். இதுவரை முறைகேடு நடக்கவில்லை. அரசியலமைப்பு சாசனத்தின் அங்கமாகவுள்ள தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது. " என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

    • மக்களவை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரன்ட்ஃஆப் இந்தியாவின் ஆதரவை பெறுகிறது.
    • சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பெறுவதற்காக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அந்த அமைப்புக்கு ஆதரவாக பணியாற்று வருகின்றன.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா, கேரள மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில் "மக்களவை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரன்ட்ஃஆப் இந்தியாவின் ஆதரவை பெறுகிறது. சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பெறுவதற்காக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அந்த அமைப்புக்கு ஆதரவாக பணியாற்று வருகின்றன.

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான எல்.டி.எஃப், காங்கிரஸ் தலைமையலான யு.டி.எஃப். பல வருடங்களாக இந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கப்பட்டது.

    காங்கிரஸ் கூட்டணி பாப்புலர் பிரன்ட்ஆஃப் இந்தியா வெளிப்படையாக ஆதரவு எனத் தெரிவித்துள்ளது. அதன்மீதான தடை குறித்து இடது சாரி கூட்டணி அமைதி காத்து வருகிறது. அது வேளையில் பிரதமர் மோடி இதுபோன்ற அமைப்புகளிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக பணியாற்றி கொண்டிருக்கிறார்" என்றார்.

    • 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவின் மக்கள் தொகையில் 12.92% முஸ்லிம்கள் உள்ளனர்
    • வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஓபிசி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது

    கர்நாடகாவில் ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்தாண்டு அம்மாநில பாஜக அரசு ரத்து செய்தது.

    வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஓபிசி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அந்த ஒதுக்கீடு தலா 2 சதவீதம் என்ற வகையில் வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளதாக அரசின் தரவுகளின்படி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பிரிவு-1ல் 17 முஸ்லிம் சமூகங்களும், பிரிவு-2ல் 19 முஸ்லிம் சமூகங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    கர்நாடக அரசின் இந்த முடிவிற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அனைத்து முஸ்லிம்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது என்பது முஸ்லிம் மதத்தில் கல்வி மற்றும் சமூக ரீதியாக மிகவும் பின்தங்கிய சமூங்களுக்கான சமூக நீதியை குறைக்கும் செயல் என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவின் மக்கள் தொகையில் 12.92% முஸ்லிம்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×