என் மலர்

  செய்திகள்

  ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை முதலமைச்சரின் கண்துடைப்பு நாடகம்- ஸ்டாலின் குற்றச்சாட்டு
  X

  ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை முதலமைச்சரின் கண்துடைப்பு நாடகம்- ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘ஸ்டெர்லைட்’ ஆலையை மூடுவதற்கான அரசாணை முதலமைச்சரின் கண்துடைப்பு நாடகம் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.#DMK #SterliteProtest #MKStalin
  சென்னை:

  தமிழக சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கைகள் மீதான கூட்டத்தொடர் இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கி ஜூலை மாதம் 9-ந்தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது குறித்து அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

  கூட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் துரைமுருகன், சட்டமன்ற கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மையப்படுத்தி சட்டமன்றத்தில் பிரச்சினையை கிளப்புவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வியூகம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  கூட்டம் முடிந்தவுடன் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

  கேள்வி:- ‘ஸ்டெர்லைட்’ ஆலையை மூட அரசு ஆணையிட்டு, ஆலைக்கு சீல் வைத்திருக்கிறார்களே?  பதில்:- மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைக்கு அரசின் சார்பில் ஒப்புதல் அளித்து இருக்கிறார்களே தவிர, அது தமிழக அரசின் ஆணையல்ல. ஒருவேளை 13 உயிர்களை கொல்லாமல் இந்த முடிவை எடுத்திருந்தால், உள்ளபடியே இந்த அரசின் நல்லெண்ணத்தை பாராட்டியிருக்கலாம். ஆனால், 13 பேரை கொன்றுவிட்டு, பல நூற்றுக்கணக்கான மக்களை பலவித கொடுமைகளுக்கு உள்ளாக்கிவிட்டு, அதன்பிறகு இந்த முடிவை எடுத்திருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பது தெரிகிறது.

  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில், 2013-ம் ஆண்டு, இதேபோன்ற நிலை ஏற்பட்டு, கண் துடைப்புக்காக அப்போது ஆலையை மூடுவதாக சொன்னார். பிறகு, அதே மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை ஆய்வு செய்து, ஆலை பாதுகாப்பாக இருக்கிறது, என்று அறிக்கை கொடுத்தது. எனவே, நாங்கள் மூடப்போகிறோம் என்று சொல்கிறோம், நீதிமன்ற உத்தரவு பெற்று ஆலையை திறந்து கொள்ளுங்கள், என்று கண் துடைப்புக்காக ஒரு நாடகத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தி இருக்கிறார்.  கேள்வி:- கவர்னர் தூத்துக்குடிக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறதே?

  பதில்:- கவர்னர் கூட செல்வதாக கூறப்படுகிறது. ஆனால், முதல்-அமைச்சர் இதுவரையிலும் தூத்துக்குடிக்கு செல்லவில்லை. ஏற்கனவே, சில அமைச்சர்கள் சென்றார்கள். நாளை(இன்று) சட்டமன்றம் கூட இருப்பதால், துணை முதல்-அமைச்சரை அனுப்பி உள்ளனர். அப்படி சென்ற துணை முதல்-அமைச்சர் ஆட்சி தலைவர் அலுவலகத்தில் உட்கார்ந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் ஓரிருவரை பெயருக்காக சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். அதற்காக, அவர்களின் உறவினர்களை அடித்து விரட்டியடித்து விட்டு, உதவியாளர்கள், செவிலியர்கள் யாரும் பக்கத்தில் இருக்கக்கூடாது என்று சொல்லி விரட்டிவிட்டு, ஊடகத்தினர் பிரச்சினைகளை சொல்லி, எதிர்த்துக் கேள்வி கேட்பார்கள், அதெல்லாம் வீடியோவில் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக, அவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல், திட்டமிட்டு ஒரு நாடகத்தை நடத்திவிட்டு வந்திருக்கிறார்.

  கேள்வி:- தனி வட்டாட்சியர்களின் உத்தரவுப்படி துப்பாக்கி சூடு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறதே?

  பதில்:- தூத்துக்குடியில் 13 பேர் படுகொலை தொடர்பாக, முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தை நாடி, அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.#DMK #SterliteProtest #MKStalin
  Next Story
  ×