என் மலர்

  செய்திகள்

  அனகாபுத்தூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க வேண்டும் - கமல்ஹாசன் வேண்டுகோள்
  X

  அனகாபுத்தூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க வேண்டும் - கமல்ஹாசன் வேண்டுகோள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை அனகாபுத்தூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க வேண்டும் என்று மய்யம் விசில் செயலி பதிவை குறிப்பிட்டு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  சென்னை:

  கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் சார்பில் ‘மய்யம் விசில்’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி மூலம் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள், ஊழல்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் அறிவித்து இருந்தார்.

  மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், “அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் அங்கிருக்கும் ஆற்றில் கலந்து நீர் மாசு ஏற்படுத்துகிறது என்று மய்யம் விசில் செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதோ ஒலிக்கத் தொடங்கிவிட்டது விசில்” என்று கூறப்பட்டுள்ளதுடன், அதன் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.

  கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மக்கள் நீதி மய்யம் பெருமளவு வேலைவாய்ப்புகள் வழங்கிவரும் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல. ஆனால் வணிகம் மற்றும் வேலைவாய்ப்பின் பெயரில் நிகழும் கொடுமையான மாசுகளுக்கு எதிரானது. அரசு இதுபோன்ற பொறுப்பற்ற மாசுக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அனகாபுத்தூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை தேவை. தொழில்கள் மெல்லச் சாகக் கூடாது... மக்களும் தான்” என்று தெரிவித்து உள்ளார். #tamilnews
  Next Story
  ×