என் மலர்

  செய்திகள்

  மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்- தொண்டர்களை சந்தித்தார்
  X

  மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்- தொண்டர்களை சந்தித்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 65-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். #HBDMKStalin
  சென்னை:

  தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 65-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.

  இதையொட்டி ஆழ்வார் பேட்டையில் அவரது வீட்டில் குடும்பத்தினர் மத்தியில் பிறந்த நாள் கேக் வெட்டினார்.

  பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடம், மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.


  காலை 8.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தொண்டர்களை சந்தித்தார்.

  பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் அவருக்கு வாழ்த்து கூற திரண்டு வந்திருந்தனர். நீண்ட வரிசையில் நின்று அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

  ரூபாய் நோட்டு, ஏலக்காய் மாலைகள், சால்வைகள், பூங்கொத்துகள், புத்தகங்கள் கொடுத்து வாழ்த்து கூறினர். சிலர் ஆளுயரமாலைகள், மலர்கிரீடம் அணிவித்து மகிழ்ந்தார்கள்.


  திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தொண்டர் ஒருவர் சிவன் வேடத்தில் வந்தார். அவரை பின் தொடர்ந்து பழத்தட்டுகள், பரிசு பொருட்களுடன் அணிவகுத்து வந்தனர்.

  மேடையில் மு.க.ஸ்டாலினுக்கு சிவன் ஆசி வழங்குவது போலவும், அதை தொடர்ந்து அணிவகுத்து சென்ற தொண்டர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.

  நடிகர் ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.

  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் சுப.வீரபாண்டியன் உள்பட ஏராளமானவர்கள் வாழ்த்து கூறினார்கள்.

  தி.மு.க. நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, அ.ராசா, எ.வ.வேலு, பெரிய கருப்பன், ஐ.பெரியசாமி, பொன்முடி, மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன் மற்றும் அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., மதுரை புண்ணிய மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். #HBDMKStalin #Tamilnews
  Next Story
  ×