search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் நீக்கம்
    X

    விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் நீக்கம்

    அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். விழுப்புரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சுமார் 150 பேர் மீது இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். விழுப்புரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சுமார் 150 பேர் மீது இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்ட விழுப்புரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டராமன், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியக் கழகச் செயலாளர் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முத்துரங்கன், துணைச் செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ் மற்றும் ஜெயக்குமார், உதயகுமார், தீபா, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுடன் தியாக துருகம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், முகையூர், மணப்பூண்டி, உளூந்தூர் பேட்டை, திருநாவலூர், திருவெண்ணைநல்லூர், ஒன்றியத்துக்குட்பட்ட நிர்வாகிகள் பலர் மீதும் கள்ளக்குறிச்சி நகரம், சின்னசேலம் வடக்கனந்தல், சங்கராபுரம், திருக்கோவிலூர், திருவெண்ணைநல்லூர், மணலூர் பேட்டை, அரகண்டநல்லூர், உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் அ.தி.மு.க.வினர் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×