என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனைத்து கட்சி கூட்டம் அரசியல் கூட்டணியாக மாறுமா?: மு.க.ஸ்டாலின் பேட்டி
Byமாலை மலர்6 Feb 2018 7:32 AM GMT (Updated: 6 Feb 2018 7:32 AM GMT)
அனைத்து கட்சி கூட்டம் அரசியல் கூட்டணியாக மாறுமாக? என நிரூபர்கள் கேட்ட கேள்விக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
சென்னை:
அனைத்து கட்சி கூட்டம் முடிந்ததும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற மறுத்து வரும் அ.தி.மு.க. அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற 13-ந்தேதி மாபெரும் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானித்து இருக்கிறோம்.
அனைத்து கட்சி தலைவர்களும் ஆங்காங்கே நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். யார்-யார் எங்கெங்கு பங்கேற்கிறார்கள் என்பது முறையாக வெளியிடப்படும்.
பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகி சிறையில் உள்ள மாணவர்களையும், மற்றவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் உடனே ரத்து செய்ய வேண்டும்.
உயர்நீதிமன்றம் உருவாக்கிட எண்ணிய சகஜநிலைக்கு திட்டமிட்டு குந்தகத்தை விளைவிக்கும் வகையில் அரசு ஈடுபடுவதை உடனே கைவிட வேண்டும்.
கேள்வி:- இன்றைய கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரம், கல்லூரி பிரச்சனை உள்ளிட்ட மற்ற பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டதா?
பதில்:- பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை இருந்தாலும் இன்று பஸ் கட்டண பிரச்சனையை மட்டும் விவாதித்தோம்.
இனி வரக்கூடிய காலங்களில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி மற்ற பொது பிரச்சனைகள் குறித்து விவாதிப்போம்.
கே:- இன்றைய கூட்டம் அரசியல் கூட்டணியாக மாற வாய்ப்பு உண்டா?
ப:- தேர்தல் வரும்போது அதற்கான விடை தெரியும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். #Tamilnews

Next Story
×