search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா நினைவிடத்தில் 5-ந்தேதி மலர் அஞ்சலி: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். அறிக்கை
    X

    ஜெயலலிதா நினைவிடத்தில் 5-ந்தேதி மலர் அஞ்சலி: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். அறிக்கை

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி அமைதி ஊர்வலம், நினைவு அஞ்சலி, கழக உடன் பிறப்புகள் உறுதிமொழி ஏற்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    அண்ணா சாலையில் அண்ணாசிலை அருகே கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நினைவு நாள் அமைதி ஊர்வலம் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பார்கள்.

    நிகழ்ச்சிகளில் தலைமைக் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை, வார்டு நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், உடன்பிறப்புகளும், பொது மக்களும் பெருந்திரளாக பங்கு பெறுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×