என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இரட்டை இலை விவகாரம்: சசிகலா அனுமதி பெற்று விரைவில் வழக்கு தொடருவோம்- வக்கீல்
சென்னை:
டி.டி.வி. தினகரன் ஆதரவு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் இன்று மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:-
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷன் ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதை எதிர்த்து நாங்கள் கோர்ட்டில் அப்பீல் செய்வோம். டெல்லி ஐகோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகிய கோர்ட்டுகளில் ஏதாவது ஒரு கோர்ட்டில் அப்பீல் செய்வோம்.
சிறையில் உள்ள பொதுச் செயலாளர் சசிகலாவிடம் கையெழுத்து வாங்கி விரைவில் வழக்கு தொடருவோம்.
தேர்தல் கமிஷன் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் யார் பக்கம் அதிகம் உள்ளார்கள் என்று மட்டும் பார்த்துள்ளது. இது எல்லா கட்சிக்கும் பொருந்தாது.
அ.தி.மு.க.வை பொறுத்த வரை பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், பிற அணி செயலாளர்கள் அனைவரும் யார் பக்கம் உள்ளனர் என்பதை பார்க்க தேர்தல் கமிஷன் தவறிவிட்டது. அது மட்டுமல்ல போலி பிரமாண பத்திரங்களை சரிபார்க்கவும் தேர்தல் கமிஷன் தவறிவிட்டது.
எனவே தேர்தல் கமிஷனின் தீர்ப்பு குறைபாடான தீர்ப்பாக கருத வேண்டி உள்ளது.
இப்போது நடைபெறும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் இருப்பதாக தேர்தல் கமிஷனோ சான்றிதழ் வழங்கி மைனாரிட்டி அரசு என்பதை தெளிவாக்கி உள்ளது.
எனவே கவர்னர் இதில் என்ன நடவடிக்கை மேற்கொள்வார் என்ற கேள்வியும் எழுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தினகரன் ஆதரவாளர் புகழேந்தி இன்று நிருபரிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணைய உத்தரவை 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே வெளியிடுகிறார். எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது என்ற தகவலை மாலை 3 மணிக்குத்தான் தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆனால் அதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைத்துவிட்டதாக முதல்- அமைச்சர் அறிவித்தது நல்லது அல்ல, இது சட்டவிரோதமானது ஆகும். தேர்தல் ஆணையர் போல முதல்-அமைச்சர் நடந்து கொண்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன்.
அதேபோல அமைச்சர்களின் செயல்பாடும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இரட்டை இலை சின்னம் அறிவிப்பு வருவதற்கு முன்பே பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கியதோடு அமைச்சர்கள் கருத்தும் தெரிவித்துவிட்டனர்.
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நானும் ஒரு மனுதாரர் என்பதால் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செயல்பாடு எனக்குமிகுந்த அதிர்ச்சியை அளித்தது. அவர்களின் செயல்பாடு தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக உள்ளது.
எனவே இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியை கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் கமிஷனின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் மனுதாக்கல் செய்வோம். இதற்கான பணிகளில் வக்கீல்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
வருகிற திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்