என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழை காரணமாக எழுச்சிப்பயணம் தள்ளிவைப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Byமாலை மலர்1 Nov 2017 4:09 AM GMT (Updated: 1 Nov 2017 4:09 AM GMT)
மழையால் எழுச்சிப் பயணம் தள்ளி வைக்கப்படுவதாகவும், தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத, குதிரை பேர அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எதிர்த்து மாநிலம் முழுவதும் மாபெரும் எழுச்சிப் பயணம் மேற்கொள்வேன் என்று அறிவித்து, நவம்பர் முதல் வாரத்தில் இந்த பயணத்தை தொடங்குவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகளில் தி.மு.க. நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், வட கிழக்கு பருவ மழையின் தாக்கம் திடீரென்று கடுமையாகி சென்னை மற்றும் புறநகர் மக்களும் கடலோர மாவட்ட மக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.
ஒரு நாள் மழையையே சமாளிக்க முடியாத வகையில் குதிரை பேர அரசின் நிர்வாகம் செயலிழந்து, மக்கள் சொல்லொனாத் துயரங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆகவே மக்கள் படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, என்னுடைய எழுச்சிப் பயணம் தற்போதைக்கு வேறு ஒரு தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
அலங்கோல ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாக பல இடங்களில் சாலைகளில் வெள்ளமென மழை நீர் தேங்கி நிற்பதையும், அதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டுக் கூட வெளியேற முடியாமல் தவிப்பதையும் காணும் போது, இந்த அரசை இனியும் நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வர வேண்டியதிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்திருக்கும் நிலையில், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஏற்கனவே நான் அறிவுறுத்தியது போல் தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.
நிர்வாக ரீதியாக தோல்வியடைந்து விட்ட இந்த குதிரை பேர ஆட்சியை நீக்கும் எழுச்சிப் பயணம் வேறு ஒரு தேதியில் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அப்போது நான் உங்களை எல்லாம் வந்து சந்திப்பேன் என்றும், தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், தி.மு.க. தொண்டர்கள் அனைவரின் கவனமும் கன மழை பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றும் பணிகளிலேயே இருந்திட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story
×