என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அ.தி.மு.க. இணைப்பு உறுதி: எடப்பாடி அணி செய்தி தொடர்பாளர் பேராசிரியர் தீரன் பேட்டி
சென்னை:
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.- எடப்பாடி அணியினர் இணைவதில் ஏற்பட்டுள்ள இழுபறி குறித்து எடப்பாடி அணி செய்தி தொடர்பாளர் பேராசிரியர் தீரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. இரு அணியினரும் நேற்று தனித் தனியாக ஆலோசனை நடத்தி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
இதில் சிறு சிறு கேள்விகளுக்கு பதில் கிடைக்காததால்தான் நேற்று உடனே இணைப்பை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கருதுகிறேன்.
ஓ.பி.எஸ். அணியில் உள்ள செம்மலை, பாண்டியராஜன், லட்சுமணன் ஆகியோரிடம் கேட்ட போது இணைவதில் ஒன்றும் பிரச்சினை இல்லை என்றுதான் தெரிவித்தனர்.
இரு அணிகளும் இணையும் போது எடப்பாடி அணியில் எப்படி ‘ட்ரீட்’ பண்ணுவார்கள் என்ற ஐயப்பாடு பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதே போல் சிறு சிறு பிரச்சினைகள் கேள்விக்கனையாக எழுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் இதை பேசி ஒருமித்த கருத்தை கொண்டு வந்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
எனவே ஓ.பி.எஸ். எடப்பாடி அணிகள் இணைவது உறுதி. இதில் 2 நாளில் நல்ல முடிவு வரும்.
அ.தி.மு.க. அணிகள் இணைவதை தொண்டர்கள் விரும்புகிறார்கள். சீக்கிரம் இரட்டை இலையை பெற வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார்கள்.
அதை செயல்படுத்தும் விதமாக இரு அணியினரும் நேற்று விவாதித்துள்ளனர். இதில் இழுபறி என்று சொல்வதைவிட முன்னேற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.
திங்கட்கிழமை அமாவாசை வருகிறது. எனவே நல்ல நாள் பார்த்து இணைப்பை அறிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.