என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு சாத்தியமில்லாதது: முன்னாள் எம்.எல்.ஏ. சாமி சொல்கிறார்
மதுரை:
அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணியும் இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று இரவு அ.தி.மு.க. அணிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இணைப்பு நடைபெறவில்லை. இது தொண்டர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. இது குறித்து மதுரையில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர்.
மதுரை மேலூரில் தினகரன் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை நடத்திய அ.தி.மு.க. அம்மா அணி அமைப்பு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சாமி கூறியதாவது:-
அ.தி.மு.க. பிளவுக்கு காரணமே ஓ.பன்னீர் செல்வம் தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி அரசை ஊழல் அரசு என்று கூறிய பன்னீர் செல்வம் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தார்.
இப்படிப்பட்டவர்கள் இணைந்து செயல்படுவது எதற்காக என்பது மக்களுக்கு தெரியும். எனவே அ.தி.மு.க. அணியின் இணைப்பு என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும் என்றார்.
ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்.ஜி. ஆர்.மன்ற பொருளாளர் சாலைமுத்து கூறியதாவது:-
அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்பது அனைத்து தொண்டர்களின் விருப்பமாகும். அ.தி.மு.க. வில் அம்மா நியமித்த நிர்வாகிகள் திறம்பட கட்சியை நடத்துகிறார்கள். தினகரன் போன்ற புதிய வரவுகள் கட்சி வளர்ச்சிக்கு உதவாது என்றார்.
எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ். பாண்டியன் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் திட்டப்படி அ.தி.மு.க. அணிகளை இணைக்க எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர் செல்வமும் ஆலோசித்து வருகிறார்கள். இந்த இணைப்பு முயற்சி எப்படி பலன் அளிக்கும் என்பது குறித்து காலம் தான் பதில் சொல்லும் என்றார்.