search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெ.தீபா
    X

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெ.தீபா

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிறுவனத் தலைவர் (அ.தி.மு.க ஜெ.தீபா அணி) பொதுச்செயலாளர் தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆங்காங்கே உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டு அதற்கு சிகிச்சை அளித்தாலும் மருத்துவமனை நிர்வாகம் டெங்கு காய்ச்சல் என நோயாளிகளுக்கும் அவரது உறவினர்களுக்கும் தெரிவிப்பதில்லை.

    அரசு மெத்தனப்போக்கால் பல உயிர் பலியாகின்ற பரிதாப நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. சுகாதார துறை இனியும் தூங்காமல் டெங்குவால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதலில் கொசு ஓழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

    பொதுமக்களும் டெங்கு காய்ச்சலுக்கு விழிப்புடன் வராமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வீடுகளில் பிடித்து வைக்கிற தண்ணீரை காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும். அதிலிருந்து தான் கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளது.

    தமிழக அரசும் டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் பொது மக்கள் மீது அக்கறை எடுத்து சிறப்பு கவனம் எடுத்திட வேண்டுமென அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை ஓட்டு மொத்தமாக ரத்து செய்ய இருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். மானிய விலை சிலிண்டரால் நாடு முழுவதும் 18 கோடியே 11 லட்சம் பேர் பயன் பெற்று வந்தனர். மத்திய அரசின் புதிய முடிவின் மூலம் அவர்களுக்கு இனி சிலிண்டர் மானியம் கிடைக்காது. மத்திய அரசின் இந்த மானிய ரத்து அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறேன்.

    உடனடியாக இந்த மானிய ரத்து அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன். மேலும் தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பில் தமிழகத்தின் பெருவாரியான குடும்பங்களுக்கு இனி ரேசன் அட்டையே கிடையாது என்று விதிமுறையில் வரையறுக்கப்பட்ட செய்தி குறிப்பு தமிழக அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழக உணவு துறை அமைச்சர் இதை மறுத்து பேசுகிறார்.

    தமிழக மக்களை வஞ்சிக்க வேண்டாம். மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நமது தமிழக மக்களை பழிவாங்க வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×