search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. மனிதசங்கிலி போராட்டம் அண்ணா சாலையில் மட்டும் 6 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்: ஜெ.அன்பழகன் அறிக்கை
    X

    தி.மு.க. மனிதசங்கிலி போராட்டம் அண்ணா சாலையில் மட்டும் 6 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்: ஜெ.அன்பழகன் அறிக்கை

    தி.மு.க. மனிதசங்கிலி போராட்டம் அண்ணா சாலையில் மட்டும் 6 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு கொண்டு வந்த ‘நீட்’ தேர்வால் இந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    தமிழக அரசு மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுத்து ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வாங்கி இருக்கலாம். ஆனால் மாநில அரசு தனது ஆட்சியை காப்பாற்ற மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது.

    நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் மனித சங்கிலி போராட்டம் 27-ந்தேதி நடைபெறுகிறது.

    இதில் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் அண்ணா சிலையில் இருந்து தேனாம்பேட்டை அன்பகம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இதில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    அண்ணா சிலையில் இருந்து சாந்தி வரை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதியும், சாந்தி முதல் எல்,ஐ.சி. வரை அண்ணாநகர் வடக்கு, தெற்கு பகுதியும், எல்.ஐ.சி.யில் இருந்து வி.எஸ்.டி.வரை மதுரவாயல் வடக்கு, தெற்கு பகுதியும்,

    வி.எஸ்.டி.யிலிருந்து அண்ணா மேம்பாலம் வரை தியாகராயநகர் கிழக்கு, மேற்கு பகுதியும், அண்ணா சாலை காமராஜர் அரங்கம் மேம்பாலத்திலிருந்து தேனாம்பேட்டை அன்பகம் வரையில் மயிலை கிழக்கு, மேற்கு பகுதியும், ஆயிரம் விளக்கு கிழக்கு, மேற்கு பகுதியும் மனித சங்கிலியில் பங்கேற்பார்கள்.

    மனித சங்கிலியில் பங்கேற்கும் பகுதி கழகங்கள், வட்டக் கழகங்கள் கழக கொடியுடன் நீட் தேர்வு ரத்து பதாகைகளுடன் மனித சங்கிலியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு ஜெ.அன்பழகன் தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×